Pandian Stores 2: என்னது ரூ.10 லட்சத்துக்கு பொதுப்பணித்துறையில் வேலை கிடைக்குமா? பதற்றத்தில் மீனா - செந்தில்!
மீனாவின் அப்பா வீட்டிற்கு வரும் படி செந்திலுக்கு போன் போட , பதறி அடித்துக் கொண்டு ஓடிய செந்தில் மற்றும் மீனாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விஷயத்தை மீனாவின் அப்பா கூறியிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. ரெண்டு ரெண்டு குடும்பம் தான். அதை வைத்தே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 520ஆவது எபிசோடில் அரசி மற்றும் குமரவேல் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
அதில், அரசி சாப்பாடு பரிமாறும் போது அவரை வேண்டுமென்றே அசிங்கப்படுத்த வேண்டும் என்று சாப்பாட்டை கீழே கொட்ட வைத்தார் குமாரு. அதன் பிறகு அரசியையும், அவரது குடும்பத்தையும் கேவலப்படுத்தினார். இதற்கு பழி வாங்க துடித்த அரசி குமரவேல் கழுத்தை தாலியை வைத்து நெறித்து வெளியில் படுக்க வைத்தார். அப்போது வந்த சக்திவேல் தனது மகன் குமரவேல் பற்றி பெருமையாக பேசி விட்டு சென்றார். ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி அவருக்கு தெரியவில்லை.
இதைத் தொடர்ந்து மீனா மற்றும் செந்தில் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றது. அதில், மீனாவின் அப்பா செந்திலுக்கு போன் போட்டு உடனே வரச் சொல்கிறார். ஆனால், என்ன விஷயம் என்று கூறவில்லை. உடனே மீனாவை கூட்டிக் கொண்டு வீட்டிற்கு வரச்சொன்னார். உடனே வீட்டிற்கு சென்ற போதுதான் செந்தில் மற்றும் மீனாவிற்கு உண்மை தெரிய வந்தது.
ஆனால், அது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதாவது, மீனாவின் அப்பா தனது மருமகனுக்காக பொதுப்பணித்துறையில் வேலை வாங்கியிருப்பதாக கூறியிருக்கிறார். போன் வந்தது உடனே ஆர்டர் காப்பியை வாங்க செல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால், போன் வருமா என்பது தான் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.




















