Meenakshi Ponnunga: ‛உன்னை மன்னிப்பு கேட்க வைப்பேன்... ’ சபதம் போட்ட ரங்கநாயகி!
Meenakshi Ponnunga Update: போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் ரங்கநாயகி சக்தி தான் கம்ப்ளைன்ட் கொடுத்தாள் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் ரங்கநாயகி சக்தி தான் கம்ப்ளைன்ட் கொடுத்தாள் என்பது தெரிந்து அதிர்ச்சி அடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
முன்னதாக சங்கிலியும் புஷ்பாவும் திட்டம் போட்டு வெற்றியை உள்ளே வைக்க முடிவு செய்கிறார்கள். இதனால் வெற்றியை தேடி வரும் போலீசை அடித்ததால் ரங்கநாயகி கைதுசெய்யப்படுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் போலீஸ் ரங்கநாயகியை கைது செய்து கொண்டு போகும் நிலையில் மீனாட்சியை யமுனாவை தேடி கார்த்திக் வீட்டுக்கு போகிறாள். சக்திக்கு கண்டிஷன் போட்டதனால் அவள் சங்கிலியை திருமணம் செய்ய சம்மதம் சொல்லி விட்டாள். அதை ஒத்துக்காமல் வீட்டை விட்டுப் போன மீனாட்சியை காணவில்லை என யமுனா கார்த்திக்கின் அம்மாவிடம் சொல்கிறாள்.
View this post on Instagram
உனக்கு கல்யாணம் பண்ண இஷ்டம் இருக்கிறதா இல்லையா என்று கார்த்திக்கின் தாய் யமுனாவிடம் கேட்கிறார். அதற்கு அவர் கார்த்திக்கை திருமணம் செய்ய இஷ்டம் என தெரிவிக்க, அப்படின்னா சக்தியை இந்த கண்டிஷனுக்கு சம்மதிக்க வை என கார்த்திக்கின் தாய் யமுனாவை கன்வின்ஸ் செய்து அனுப்புகிறாள். பின்னர் கார்த்திக்கின் பெற்றோர் இந்த கல்யாணம் நடக்க போவதில்லை என சந்தோஷப்படுகிறார்கள்.
அடுத்ததாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் ரங்கநாயகி சக்தி தான் கம்ப்ளைன்ட் கொடுத்தாள் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். அப்போது அங்கு வரும் சக்தி ரங்கநாயகியையும், வெற்றியையும் திட்டி இவர்களை தூக்கி உள்ளே போடுங்கள் என போலீசிடம் சொல்கிறார். உடனே பூஜா லாயரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வர ரங்கநாயகி ஜாமீனில் வெளியே வருகிறார். அவர் எப்படி வெளியே வந்தார் என சக்தி கேட்க உன்னை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பேன் என ரங்கநாயகி சக்தியிடம் சபதம் போடுகிறாள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

