Meenakshi Ponnunga Serial: ரங்கநாயகியை தெருவில் இழுத்துச் சென்ற போலீஸ்.. வெற்றி, ஷக்தி இடையே பிரிவு..மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்!
Meenakshi Ponnunga Serial: மீனாட்சி ஆவேசமாக ரங்கநாயகி வீட்டிற்கு வந்து இன்னும் இன்னும் கொஞ்ச நாள்ல இதை விட பெரிய வீட்டை கட்டி ஓட்டலை கட்டி காட்டுறேன் என்று சவால் விடுகிறாள்.
Meenakshi Ponnunga Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் கடந்த வாரம் ரங்கநாயகி மீனாட்சி வீட்டையும் மெஸ்ஸையும் தரைமட்டமாக்க பணத்தை கொடுத்த நிலையில் வரும் நாட்களில், நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது சங்கிலி ரவுடிகளுடன் வந்து வீட்டை இடித்து தரைமட்டமாக்க சரண்யா சாபம் விட “சங்கிலி பணத்தை கொடுத்து இடிக்க சொன்னதே உங்க அம்மா தான்” என்று அதிர்ச்சி கொடுக்க, மீனாட்சி ஆவேசமாக ரங்கநாயகி வீட்டிற்கு வந்து இன்னும் இன்னும் கொஞ்ச நாள்ல இதை விட பெரிய வீட்டை கட்டி ஓட்டலை கட்டி காட்டுறேன் என்று சவால் விடுகிறாள்.
மறுபக்கம் வெற்றி இளநீர் கடையில் இருக்க லாரி கிடைக்க வர, அதில் இருந்து தப்பிக்க வீட்டிற்கு கிளம்பி வரும் போது சக்தி வீட்டை இடித்து தள்ளிய விஷயம் தெரிய வருகிறது. போலீசில் ரங்கநாயகி மீது புகார் கொடுக்க, அவளை கைது செய்து தெருத்தெருவாக அழைத்து செல்கின்றனர். வீட்டிற்கு வந்த வெற்றிக்கு விஷயம் தெரிய வந்து ஸ்டேஷனுக்கு ஓடிப்போய் சிறையில் இருக்கும் அம்மாவை வெளியே கொண்டு வர கம்பிகளை உடைக்க முயற்சி செய்ய போலீஸ் அவனை அறைந்து வெளியே துரத்துகிறது.
செல்வ முருகன் ரங்கநாயகியை வெளியே கொண்டு வர முயற்சி செய்ய வக்கீல் மீனாட்சி கேஸை வாபஸ் வாங்குவதைத் தவிர வேற வழியே இல்ல என்று சொல்ல, செல்வமுருகன் மீனாட்சியை சந்தித்து கேஸை வாபஸ் வாங்க சொல்லிக் கெஞ்ச, மீனாட்சி முடியவே முடியாது என மறுக்க, ஷக்தி அத்தையை நான் வெளியே எடுக்கிறேன் என்று கிளம்பி வருகிறாள்.
இங்கே ரங்கநாயகியை கோர்ட்க்கு அழைத்து செல்லத் தயாராக சக்திக்கு எதிராக இருக்கும் வக்கீல் அவரை ஜாமினில் வெளியே எடுக்க, அது தெரியாமல் ஷக்தி வக்கீலுடன் வர, ரங்கநாயகி “உங்க அம்மா என்னை உள்ள தள்ளுவா, நீ வெளியே எடுக்கிற மாதிரி நாடகம் போடுறியா?” என்று கோபப்பட, இருவருக்கும் வாக்குவாதம் உருவாக, ஷக்தி வீட்டை இடிக்க நீங்க பணம் தரல என்று கேட்க வெற்றி அவளை ஓங்கி அறைந்து விடுகிறான்.
வெற்றிக்கும் ஷக்திக்கும் இடையே இந்த பிரச்னையால் பிரிவு உருவாகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.