Maari Serial Today July 04: பிளாப்பான தாராவின் பிளான்.. சித்தரால் தெரிய வந்த உண்மை - மாரி சீரியல் அப்டேட்!
Maari Serial Today July 4th: சங்கரபாண்டி சூர்யாவிடம் “நீங்க முழு மனசா சாமி கும்பிடுங்க, குழந்தையை நான் வச்சிக்கிறேன்” என்று வாங்கி ஒரு ரூமுக்குள் அடைத்து வைத்து விடுகிறான்.
Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் காளீஸ்வரி என்ட்ரி கொடுத்து வெளியே கிளம்பிய சாஸ்திரியை உள்ளே அழைத்து வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது குழந்தையைக் கொண்டு வந்த தம்பதியை பார்த்து சந்தேகப்படும் காளீஸ்வரி, அந்த விஷயத்தை குடும்பத்தாரிடம் சொல்ல, அந்த நேரம் பார்த்து சித்தரும் அங்கு வந்து “என்னாச்சு, என்ன விஷயம்?” என்று கேட்க, காளீஸ்வரி “அவங்க கொண்டு வந்துள்ள குழந்தை உண்மையாகவே மாரியோட குழந்தை தானா என்று தெரிஞ்சிக்கணும்” என்று சொல்கிறாள்.
இதையடுத்து சித்தர் “நீங்க வீட்டுக்குப் போய் தேவியம்மா போட்டோவை கொண்டு வாங்க, பூஜை ஒன்றை செய்து உண்மையை கண்டு பிடித்து விடலாம்” என்று சொன்னதும், டூப்ளிகேட் தம்பதி எஸ்கேப் ஆக முயற்சி செய்ய, ஹாசினி அவர்களைப் பிடித்து வைக்கிறாள்.
அதன் பிறகு சித்தர் போட்டோ வந்ததும் பூஜையைத் தொடங்க, தாரா சாஸ்திரி “குழந்தை இங்க இருந்தா மாரியோட உண்மையான குழந்தை அது தான் என்று தெரிந்து விடும்” என்று சொன்னதும், சங்கரபாண்டி சூர்யாவிடம் “நீங்க முழு மனசா சாமி கும்பிடுங்க, குழந்தையை நான் வச்சிக்கிறேன்” என்று வாங்கி ஒரு ரூமுக்குள் அடைத்து வைத்து விடுகிறான்.
சித்தர் செய்த பூஜையில் அது மாரியின் குழந்தை இல்ல என்று தெரிய வர, அந்த டூப்ளிகேட் தம்பதியை போலீசில் ஒப்படைக்க அவர்கள் பணத்துக்காக ஆசைப்பட்டு இப்படி செய்து விட்டதாக சொல்லி சமாளித்து தாராவைக் காப்பாற்றி விடுகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Sivakarthikeyan: அஜித்துடன் 2008இல் இணைந்து நடித்த சிவகார்த்திகேயன்! வைரலாகும் பழைய ஃபோட்டோ!