மேலும் அறிய

Ajith - Sivakarthikeyan: அஜித்துடன் 2008இல் இணைந்து நடித்த சிவகார்த்திகேயன்! வைரலாகும் பழைய ஃபோட்டோ!

அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் 2008ஆம் ஆண்டு இணைந்து நடித்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் குழந்தைகள், இளைஞர்கள் , ஃபேமிலி ஆடியன்ஸ் என மூன்று தரப்பு ரசிகர்களையும் கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக தனது பயணத்தைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் குறைந்த காலத்தில் மிகப்பெரிய ஸ்டாராக உருவெடுத்துள்ளார். ஆரம்ப காலத்தில் பிரபல நடிகர்களின் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். நடிகர் அஜித்துடன் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத தகவல். 

ஏகன்

அஜித் நடித்து கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான படம் ஏகன். இந்தியில் ஷாருக் கான் நடித்த மே ஹூன் நா படத்தின் ரீமேக் ஆக இப்படம் உருவானது. பிரபிதேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரம் இப்படத்தை இயக்கினார். நயன்தாரா, பியா பாஜ்பாய், சுமன், ஜெயராம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஆக்‌ஷன் காமெடி கலந்த நடிப்பில் இப்படத்தில் அஜித் நடித்திருந்தார். வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் ஏகன் படம் தோல்வியை தழுவியது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு காட்சியில் சின்ன ரோலில் அஜித்துடன் இணைந்து  நடித்திருப்பார். தற்போது இந்தக் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.

அமரன், எஸ்.கே 23

தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் நாகராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப் பட்டுள்ள இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. சாய் பல்லவி இதில் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 படத்தில் நடித்து வருகிறார் எஸ்.கே. ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் ருக்மினி வசந்த் நாயகியாக நடிக்கிறார். வித்யுத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

டான் இயக்குநருடன் கூட்டணி

அண்மையில் வெளியாகியுள்ள தகவலின்படி சிவகார்த்திகேயன்  நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான  டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் கூட்டணி அமைக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதாகவும், டான் படத்தினைப் போலவே எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.  சிவகார்த்திகேயனின் 24வது படமான இப்படத்திற்கு  பாஸ் எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகவும், பேஷன் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Embed widget