Maari : கலசத்திற்காக கிணற்றில் குதித்த சூர்யா...விஷம் குடிக்கபோன மாரி..இன்றைய எபிசோடில் என்ன நடந்தது ?
இன்றைய எபிசோடில் காணாமல் போன கலசம் ரவுடியிடம் இருப்பது தெரிந்து சூர்யா, அங்கு செல்கிறான்.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் காணாமல் போன கலசம் ரவுடியிடம் இருப்பது தெரிந்து சூர்யா, அங்கு செல்கிறான்.
ரவுடி சூர்யாவிடம் கலசத்தை கொடுக்காமல் அதனுடன் தப்பித்து செல்ல சூர்யாவும் ரவுடி மணியும் ரவுடியை பாலோ செய்து போகின்றனர். ஒரு கட்டத்தில் தவறுதலாக இடிபட்டு ரவுடியின் கையில் இருந்த கலசமும் பாலும் கிணத்துக்குள் விழுந்து விட அப்போது ஊர் பெரியவர்கள் வருகின்றனர். இது பாழும் கிணறு இதில் யாரும் குதிக்க வேண்டாம் என்று அவர்கள் சொல்கின்றனர். இன்னொரு பக்கம் ஊர் பெரியவர்கள் கலசத்தை பார்க்க மாரி வீட்டுக்கு வந்து கொண்டிருக்க மாரி பூஜை அறையில் கையில் விஷத்தை வைத்துக்கொண்டு கலசத்துக்காக காத்திருக்கிறாள்.
View this post on Instagram
அடுத்து சூர்யா வேறு வழி இல்லாமல் அந்த பாழும் கிணற்றில் குதித்து உள்ளே இருந்து கலசத்தை எடுக்கிறான். இங்கே ஊர் பெரியவர்கள் வந்து கொண்டிருக்க கடைசியாக சூர்யா கலசத்துடன் வீட்டுக்கு வர மாரி விஷத்தை குடிக்க போன நிலையில் கலசம் வந்த விஷயம் கேட்டு சந்தோஷப்படுகிறாள்.
அடுத்து கலசத்திற்கு பூஜை செய்து அதை கோயிலுக்கு எடுத்து சென்று கோவிலில் வைத்து பூஜை செய்யும் போது ஜெகதீசுக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும் என்று சொல்ல ஜெகதீஷ் எனக்கு வேண்டாம் என் மருமகள் மாரிக்கு முதல் மரியாதை செய்யுங்கள் என்று சொல்ல மாரி சூர்யாவுக்கு செய்யுங்கள் என்று சொல்ல இறுதியாக சூர்யாவுக்கும் மாரிக்கும் முதல் மரியாதை செய்யப்படுகிறது.
தனது திட்டம் நிறைவேறாமல் கலசத்துக்கு பூஜை நடப்பதை பார்த்து தாரா கடுப்பானதோடு இன்றய எபிசோடு நிறைவடைகிறது.