Paper Rocket: கிருத்திகா உதயநிதியின் ஃபீல் குட் வெப் சீரிஸ்.. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘பேப்பர் ராக்கெட்’ .. எப்போ தெரியுமா?
நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா, தமிழில் வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இயக்குர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா, தமிழில் வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து காளி என்ற படத்தை எடுத்தார். இதற்கிடையில் கடந்த ஆண்டு கிருத்திகா பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தார். இந்த சீரிஸில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கருணாகரன், நிர்மல் பழனி, கவுரி கிஷன், தீரஜ், சின்னி ஜெயந்த், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மொத்தம் 7 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் விறுவிறுப்பாக செல்வதால் பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படும். ஒரு மனநல ஆசிரமத்துக்குள் அடைந்து கிடக்கும் 5 பேரின் ஆசைகளை நிறைவேற்ற காளி வெங்கட் வெளியே ட்ரிப் ஒன்றிற்கு அழைத்து செல்ல அங்கே அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதனை எப்படி சமாளித்தார்கள் என உருக வைக்கும் கதை தான் இந்த பேப்பர் ராக்கெட். இதன்மூலம் ஃபீல்குட் வெப் சீரிஸை இயக்கி அனைவரிடமும் பாராட்டைப் பெற்றார் கிருத்திகா. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வெப் சீரிஸ் என பேப்பர் ராக்கெட் கொண்டாடப்பட்டது.
இப்படியாக வெப் சீரியஸாக மக்களின் மனங்களை வென்ற இந்த தொடர் தற்போது திரைப்படமாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. வரும் ஞாயிறு (செப்டம்பர் 9) மதியம் 1.15 மணி முதல் 6 மணி வரை என நான் ஸ்டாப் கொண்டாட்டமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் இந்த சண்டே ஜீ தமிழ் ரசிகர்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான விருந்தாக இருக்கும் என நம்பலாம்.
மேலும் படிக்க: அன்று அப்பா இறந்தும் அழாத மாரிமுத்து.. இன்று அவரது மறைவுக்கு அழும் லட்சக்கணக்கான ரசிகர்கள்..