Bayilwan Ranganthan: நடிகைகள் பற்றி மோசமான கருத்து.. பயில்வான் ரங்கநாதனை கேள்விகளால் அலறவிட்ட காத்து கருப்பு..
தான் எந்த நடிகையும் பற்றி தவறாக பேசவில்லை. அவர்கள் சொல்வதை தான் தகவல்களாக பேசுவதாக நடிகரும், யூட்யூபருமான பயில்வான் ரங்கநாதன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தான் எந்த நடிகையும் பற்றி தவறாக பேசவில்லை. அவர்கள் சொல்வதை தான் தகவல்களாக பேசுவதாக நடிகரும், யூட்யூபருமான பயில்வான் ரங்கநாதன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர், நடிகர், யூட்யூபர் என பல துறைகளிலும் தொடர்ந்து இயக்கி வரும் பயில்வான்ம் ரங்கநாதன் தொடர்ந்து தனது யூட்யூப் பக்கத்தில் சினிமா விமர்சனமும், சினிமா துறையினர் சார்ந்த தகவல்களையும் தெரிவித்து வருகிறார். அப்படி அவர் பேசும் தகவல்கள் பல கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான நபராக வலம் வரும் காத்து கருப்பு, பயில்வான் ரங்கநாதனை நேர்காணல் செய்துள்ளார். அதில் அவரை பல கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்துள்ளார். அதில் பேசிய பயில்வான் ரங்கநாதன், “நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என நினைத்தது இல்லை. எம்ஜிஆருடன் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது உலகம் சுற்றும் வாலிபன், நவரத்தினம் ஆகிய படங்களில் நடிக்க வைத்தார். அதன்பிறகு சுப்பரபாதம் படத்தில் நம்பியாருடன் தனியாக சண்டை காட்சியில் நடித்தேன். திருப்பதி மலையில் எடுக்கப்பட்ட கடைசி படமும் அது தான். அதன் பிறகு பசி படத்தில் நடித்த நான், முந்தானை முடிச்சி படத்தின் மூலம் நடிகராக மாறிவிட்டேன்
நான் பத்திரிக்கையாளராக வேலை செய்ததால் நடுநிலை செய்திகள், எதிர்மறை செய்திகள், நேர்மறை செய்திகள் எப்படி எழுத வேண்டுமென எனக்கு தெரியும். அதை கற்றுக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார். அதன் பரிணாம வளர்ச்சி தான் யூட்யூபர் ஆக உள்ளேன்” என கூறினார்.
அப்போது பயில்வான் ரங்கநாதனிடம், ‘யூட்யூப்பில் எப்ப பார்த்தாலும் உங்களுடைய சர்ச்சை தான் நிறைய வந்துட்டு இருக்கு. தமிழ்நாட்டுல யாருமே பார்க்காத விஷயத்தை நீங்க சொல்றீங்க. குறிப்பாக நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் பண்றாங்கன்னு சொல்றீங்களே?.. இதெல்லாம் நீங்க கண்ணால பார்த்துட்டு சொல்றீங்களா? இல்லை கண்ணால பார்த்துட்டு சொல்றீங்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘நான் கேள்விப்படவில்லை. செய்திகளை சொல்கிறேன். நடிகைகள் சொல்வதை தான் நான் கூறுகிறேன். இந்த நடிகருடன் நான் டேட்டிங் சென்றேன், இயக்குநர் அழைத்தார் என அவர்கள் சொல்வதை தான் நான் பேசுகிறேன். கற்பனையாக சொல்லவில்லை’ என பதிலளித்தார்.
சினிமாவில் பெரிய துறை என்பதால் பலவிதமான சங்கங்கள், செயல்பாடுகள் உள்ளது. ஆனால் எப்ப பார்த்தாலும் இதுபோன்ற நடிகைகள் பற்றிய செய்தியை பேசுவது குறித்த காரணம் என்ன என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பயில்வான் ரங்கநாதன், ‘நான் 100 தகவல் பேசினேன் என்றால் அதில் 20 சதவிகிதம் மட்டும் தான் இப்படிப்பட செய்திகள் இருக்கும். கேள்வி கேட்பவர்கள் என்னுடைய தகவல்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும்’ என பதிலளித்தார். இந்த நேர்காணல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.