Karthigai Deepam: கார்த்தியின் பிளானுக்கு வந்த சிக்கல்: கண்ணாமூச்சி காட்டும் ராஜேஸ்வரி: கார்த்திகை தீபம் அப்டேட்!
“என்ன பா கார்த்திக் எதையோ நிரூபிக்க போறேனு சொன்ன, இப்போ ஒருத்தனையும் காணவில்லை?” என்று வம்பிழுக்கிறாள் ராஜேஸ்வரி. “யார் கிட்ட என்ன பேசுறோம்னு பார்த்து பேசு” என்று கார்த்திக்கை எச்சரிக்கிறாள்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் நியூஸ் எடிட்டர் ரவியிடம் பேசி வீட்டிற்கு வரவைத்து உண்மையை சொல்ல வைக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, கார்த்தியின் பிளானை அறிந்த ராஜேஸ்வரி ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, நீ மாட்டிக்க போற மா என்று சொல்ல, “அவன் கில்லாடினா நான் அவனுக்கு மேல, நான் பண்ண போறதை மட்டும் பாரு” என்று சொல்லி போனை வைக்கிறாள்.
கார்த்திக் வீட்டிற்கு வந்து நியூஸ் எடிட்டர் வந்து உண்மையை சொல்லுவான் என்று காத்திருக்க, நேரம் ஆகிக் கொண்டே போகிறது. நியூஸ் எடிட்டர் வராத காரணத்தினால் ராஜேஸ்வரி “என்ன பா கார்த்திக் எதையோ நிரூபிக்க போறேனு சொன்ன, இப்போ ஒருத்தனையும் காணவில்லை?” என்று வம்பிழுக்கிறாள் ராஜேஸ்வரி. “யார் கிட்ட என்ன பேசுறோம்னு பார்த்து பேசு” என்று கார்த்திக்கை எச்சரிக்கிறாள்.
இதையடுத்து கார்த்திக் நியூஸ் எடிட்டர் கண்டிப்பா வருவாரு, எனக்கு 5 மணி வரைக்கும் டைம் கொடுங்க” என்று சொல்லி விட்டு நேராக ரவி வீட்டிற்கு கிளம்பி வர, அவரது மனைவி “அவர் காலையிலேயே கிளம்பிட்டாரே அண்ணா, இன்னும் வரலையா?” என்று கேட்க, கார்த்திக் எதையும் சொல்லாமல் நான் பார்த்துக்கறேன் என்று சமாளித்து வெளியே வருகிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? ரவியை கண்டுபிடித்து கார்த்திக் எப்படி உண்மையை உடைக்க போகிறான் என்ற திருப்பங்களுடன் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.