Karthigai Deepam: ரேவதியிடம் மாட்டிக் கொள்ளப் போகும் கார்த்தி? கார்த்திகை தீபத்தில் இன்று இதுதான் நடக்கும்!
கார்த்திக் அம்மாவிற்காக புடவை வாங்கும் ரேவதியிடம் தான் ஒரு பணக்கார குடும்பம் என்று தெரிந்து மாட்டிக் கொள்வோமா? என்று கார்த்திக் அச்சப்படுகிறார்.
தமிழில் உள்ள தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக இருப்பது ஜீ தமிழ். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சிவானாண்டியிடம் சவால் விட்டதை பற்றி மயில் வாகனம் சாமுண்டீஸ்வரியின் மகள்களிடம் சொல்கிறார். இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்தி்க்கிடம் பிடித்ததை கேட்கும் ரேவதி:
அதாவது, ரேவதி மறுநாள் காலையில் காபி போட்டு வந்து கார்த்தியிடம் கொடுக்கிறாள். கார்த்திக் "என்னங்க எனக்கு காபி எல்லாம் போட்டு வந்து கொடுக்கறீங்க" என்று கேள்வி கேட்கிறான். "நீங்களும் இந்த வீட்டில் ஒருத்தர் தான். பல நாளா எங்க அம்மா மனசுல இருந்த சோகத்தை வெளியே கொண்டு வந்து நீங்க தான்" என்று சொல்கிறாள்.
பிறகு கார்த்திக்கு காபி கொடுத்து விட்டு ஊஞ்சலியில் உட்கார்ந்து உங்களுக்கு என்ன பிடிக்கும் என்றெல்லாம் கார்த்திக் குறித்து கேட்டு தெரிந்து கொள்கிறாள், கார்த்திக் அப்படியே தூங்கி விட ரேவதி அவனுக்கு போர்வையை போர்த்தி விட்டு சென்று விடுகிறாள்.
கார்த்திக் அம்மாவிற்கு புடவை:
அடுத்த நாள் கடைக்காரர் ஒருவர் புடவைகளுடன் வீட்டிற்கு வருகிறார். கார்த்திக் யார்? என்று விசாரிக்க இந்த வீட்டில் தான் புடவை கொண்டு வர சொன்னதாக சொல்ல, துர்கா "நான் தான் வர சொன்னேன்" என்று சொல்கிறாள். பிறகு புடவைகளை எடுக்கும் போது ரேவதி சில புடவைகளை காட்டி "ஓகே வா" என்று கேட்க கார்த்திக்கும் ஓகே சொல்லி போன் பேச வெளியே செல்கிறான்.
புடவை எடுத்து முடித்ததும் ரேவதி இரண்டு பேக்குடன் வந்து வா போகலாம் என்று சொல்ல, கார்த்திக் எங்கே என்று கேட்க உங்க அம்மாவுக்காக தான் புடவை எடுத்தேன் என்று சொல்ல கார்த்திக் ஷாக் ஆகிறான். இதை "முதல்லேயே சொல்லி இருந்தா வேண்டாம்னு சொல்லி இருப்பேனே" என்று சொல்ல ரேவதி "அதனால் தான் சொல்லல" என்று சொல்கிறாள்.
ரேசன் கடை:
அடுத்து கார்த்திக்கை கூப்பிட அவன் ஒரு போன் பேசி விட்டு வருவதாக சொல்ல, ரேவதி அதெல்லாம் வேண்டாம் என்று அழைத்து கொண்டு கிளம்புகிறாள். போகும் போது வழியில் காரை நிறுத்தும் கார்த்தி அபிராமிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி இப்போ நாமா பணக்காரங்க என்பது தெரிய போகுது என்று பதற அபிராமி நீ கவலைப்படாத அவளை ரேஷன் கடைக்கு கூட்டிட்டு வா என்று சொல்லி போனை. வைக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.