Ethirneechal : உண்மையை உடைத்த தர்ஷினி... ஜோராக நடக்கும் ஆதிரை திருமண ஏற்பாடுகள்... எதிர்நீச்சல் இன்றைய அப்டேட்
Ethirneechal : சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் இன்றைய (மே 29) எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய எபிசோடில் ஜனனியின் ஆபீஸில் புதிதாக வேலைக்கு சக்தி சேர்ந்துள்ளதை பார்த்து ஜனனி அதிர்ச்சி அடைகிறாள். வெளியில் வந்ததும் "இங்க வந்ததுக்கு அப்புறம் தான் இது நீ வேலை செய்யும் ஆபீஸ் என தெரிந்தது. அவனே எனக்கு கல்யாணம் ஆகவில்லைன்னு சொல்லிட்டான். என்னால எதுவும் சொல்ல முடியல" என்கிறான்.
வட்டிக்காரனிடம் சென்று பேசிவிட்டு வீடு திரும்பிய ரேணுகா மற்றும் நந்தினியிடம் அங்கே என்ன நடந்தது என ஞானம் கேட்கிறான். அவனுடைய இடத்தில் டான்ஸ் ஸ்கூல் நடத்திக்கொள்ள சொன்னதாகவும் அவனுடைய மகளுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்க சொன்னதாகவும் ரேணுகா சொல்கிறாள். அதை கேட்டு ஞானம் கோபப்படுகிறான். இது அனைத்தையும் கரிகாலன் ஒட்டுக்கேட்டு விட்டு கரிகாலனிடம் போய் போட்டு கொடுக்கிறான். குணசேகரன் வந்து குடும்ப மானத்தை வாங்குறீங்களா என தாம் தூம்ன்னு குதிக்கிறார்.
குணசேகரன் கத்துவதை கேட்டு விசாலாட்சி அம்மாவிடம் டான்ஸ் ஆடி கடனை அடை என தப்பு தப்பாக சொல்கிறார். நந்தினி குணசேகரனுக்கு சரியான பதிலடி கொடுக்கிறாள். "நாங்க ஏதோ பண்ணிட்டு போறேன். உங்களுக்கு என்ன பிரச்சினை. நீங்க ஏன் இதுல தலையிடுறீங்க" என கேட்கிறான். "இந்த குடும்ப பெயரை சொல்லி கூத்து அடிக்க கூடாது. அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் விடவும் மாட்டேன்" என மிரட்டுகிறார்.
சக்தியும் ஜனனியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையை சொல்லிவிடலாம் என ஜனனி சொல்ல சக்தி கொஞ்சம் பொறுமையா இரு என சமாதானம் செய்கிறான். அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்ததும் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். அதெல்லாம் தேவையில்லை. காசை அவனுக்கு கொடுத்துடலாம் என கதிர் சொல்ல ரேணுகா கதிரை தடுக்கிறாள். "வேற மாதிரி இருந்தா நாம யோசிக்கலாம். ஆனா காசுக்கு பதிலா கிளாஸ் எடு என சொல்றான். அதனால் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லலாம்" என ஜனனி சொல்கிறாள்.
ஆனால் ஞானமோ அவனுடன் சேர்ந்து தொழில் செய்வதில் எனக்கு விருப்பமில்லை என சொல்லி விடுகிறான். "அவர் என்ன எங்க அப்பாவோட மோசமானவரா?" என தர்ஷினி சொல்ல அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் நேற்றைய எபிசோட் கதைக்களம்.
இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது :
அனைவரும் ரேணுகாவின் டான்ஸ் ஸ்கூல் பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது தர்ஷினி "அந்த ஆள் என்ன அப்பாவோட மோசமானவரா? என்ன கடத்தினது எங்க அப்பா. அது எனக்கு 100% தெரியும்" என தர்ஷினி சொல்லவும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அப்போது ஜான்சி ராணி சாப்பாடு கேரியரை எடுத்து கொண்டு குணசேகரன் வீட்டுக்கு வருகிறாள். அவளை பார்த்து ஜனனி கடுப்பாகிறாள். "அண்ணன் உன்னோட தங்கச்சி ஆதிரைக்கு ஜோரா கல்யாண ஏற்பாடு நடக்குது. அந்த அருண் பய வெளிநாட்டில் இருந்து வந்துட்டானாம்" என்கிறாள் ஜான்சி ராணி. அதை கேட்டு குணசேகரனும் விசாலாட்சி அம்மாவும் ஷாக்காகிறார்கள்.
கீழே வந்தவர்களிடம் ஜான்சி ராணி தேவையில்லாமல் வாயை கொடுக்க கடுப்பான தாரா "பெரியப்பா கிட்ட காசு வாங்க வந்தா அதை மட்டும் வாங்கிட்டு போ. அதை விட்டுட்டு அண்ணேன் அண்ணேன்னு ஊளை விட்டுக்கிட்டு இருக்காத" என நக்கலடித்து தாராவை ஜான்சி ராணி கையை ஓங்கி "என்னையே எதிர்த்து பேசுறியா?" என்கிறாள்.
பாய்ந்து வந்து அவளின் கழுத்தை பிடித்த தர்ஷினி "யார்கிட்ட கை ஓங்குற" என்கிறாள். உடனே மேலே இருந்து வேகவேகமாக மிரட்டிக்கொண்டே இறங்கி வருகிறார் குணசேகரன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.