Ethirneechal: ஜீவானந்தத்தை அடிக்கடி சந்திக்கும் ஈஸ்வரி... கொலைகாரனை கண்டுபிடித்த கெளதம்... பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல்
Ethirneechal Sep 21 promo : ஜீவானந்தம் மனைவியை கொன்றது குணசேகரன் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறான் கெளதம். ஜீவானந்தத்தை மீண்டும் ஈஸ்வரி. இன்றைய எதிர்நீச்சலில்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் இரண்டாவது பிள்ளை என ஜோசியர் சொன்னதை உறுதிப்படுத்துகிறார் விசாலாட்சி அம்மா. "குணசேகரனுக்கு முன்னாடி ஒரு ஆண் பிள்ளை பிறந்து இறந்தது இந்த விஷயம் குணசேகரனுக்கு கூட தெரியாது" என சொல்கிறார். பிறகு ஜோசியர் "உங்கள் மகனின் நேரம் இப்போது கொஞ்சம் சிரமமாக தான் உள்ளது. அவர் இங்கிருந்து 110 கி மீ தொலைவில் தான் இருக்கிறார். ஆனால் அவரை ஒரு பத்து நாட்கள் கழித்து நீங்கள் தேடுவதை துவங்கலாம். கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள். அதே போல உங்கள் வீட்டில் இருக்கும் மூத்தவர் ஒருவருக்கு ஆபத்து இருக்கிறது. அவரின் உயிர் பலியை தடுக்க முடியாது" என்கிறார் ஜோசியர். அதை கேட்டு மூவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அப்பத்தா குணசேகரன் எழுதி வைத்து சென்ற கடிதத்தை படித்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார். "அவன் ஒரு நாள் திரும்பவும் வருவான் ஆனால் முந்தைய குணசேகரனை விடமும் அபத்தனவாக வருவான். அதனால் அனைவரும் அதிக ஜாக்கிரதையாக இருங்கள். அவன் திரும்பி வரும் போது அவனை எதிர்க்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும்" என்கிறார் அப்பத்தா.
ஜான்சி ராணி வீட்டுக்கு வந்து அனைவரையும் வீணாக வம்புக்கு இழுக்கிறாள். அண்ணன் வரும் வரை நான் இங்கே தான் இருப்பேன் எவளும் என்னை ஏமாத்த முடியாது என்கிறாள். விசாலாட்சி அம்மாவையும் அவள் இங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிடுகிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இன்றைய ப்ரோமவில் விசாலாட்சி அம்மா கண்கலங்கிய படி "நீங்களாச்சு அந்த கிழவியாச்சு என்ன ஆள விடுங்க" என அழுகிறார். "நீங்க என்ன அத்தை தப்பு பண்ணீங்க?" என்கிறாள் நந்தினி.
கெளதம் ஒரு நபரை சந்திக்கிறான். தோழர் மனைவியை கொன்றது யார் என்ற தகவல் ஏதாவது கிடைத்ததா என அந்த நபரிடம் கேட்கிறான். அதற்கு அவன் "ஆதி குணசேகரன்" என்கிறான். அதை கேட்டது கெளதம் எதையோ யோசித்து கொண்டு இருக்கிறான்.
ஈஸ்வரி ஜீவானந்தத்தை போய் சந்திக்கிறாள். "எனக்கு நிறைய சங்கடம் இருக்கு வேற வழி தெரியல" என ஜீவனந்தத்திடம் சொல்லி கொண்டு இருக்கிறாள். அதற்கு அவன் "ஆனா" என எதையோ சொல்ல வருகிறார் ஆனால் அங்கே அவர் மகள் வெண்பா வரவே அவர் பேசுவதை அப்படியே நிறுத்தி விடுகிறார்.
வெண்பா அங்கே உட்கார்ந்து படித்து கொண்டு இருக்கிறாள். ஈஸ்வரி வெண்பாவை பார்த்து கொள்வதாக சொல்கிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
இனி வரும் எபிசோட்களில் ஏராளமான ட்விஸ்ட் காத்திருக்கின்றன. குணசேகரனாக வேறு எந்த நடிகர் என்ட்ரி கொடுக்க போகிறார் என்பது தான் ரசிகர்களின் பெரிய ஆர்வமாக இருக்கிறது.