Ethirneechal: எங்கய்யா போன? கண்கலங்க வைத்த கரிகாலன்... உடைந்த குணசேகரன் குடும்பம்... கண்களை குளமாக்கிய இன்றைய ப்ரோமோ
Ethirneechal Sep 19 promo : வீட்டை விட்டு வெளியேறிய குணசேகரன் ஆடிட்டரிடம் என்ன சொன்னார்? அதை கேட்டு உடைந்து போய் அழும் குடும்பத்தினர். இன்றைய எதிர்நீச்சல் எபிசோடில் என்ன நடக்கிறது?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் விசாலாட்சி அம்மா ஈஸ்வரியை திட்டி தர்ஷனையும் அவளையும் குணசேகரனினிடம் மன்னிப்பு கேட்க சொல்லி சொல்கிறார். ஈஸ்வரியும் காபியை எடுத்துக்கொண்டு மாடியில் உள்ள குணசேகரன் ரூமுக்கு சென்று பார்க்கிறாள் ஆனால் அவர் அங்கு இல்லை. கீழே வந்து விசாலாட்சி அம்மாவிடம் சொல்ல, கதிர் ஒரு பக்கமும், ஞானம் வெளியில் தோட்டத்து பக்கமும் தேடுகிறார்கள் ஆனால் அவர் எங்குமே இல்லை.
பிறகு ஞானம் அண்ணனுக்கு நான் போன் செய்து பார்க்கிறேன் என சொல்லி போன் செய்தால் மாடியில்தான் ரிங்கிங் சத்தம் கேட்கிறது. மாடிக்கு சென்று ஞானம் பார்க்க அங்கே குடும்ப போட்டோவுக்கு அருகே போனும் அது அடியில் ஒரு லேட்டரையும் எழுதி வைத்துள்ளார் குணசேகரன். அதை படித்து பார்த்த ஞானம் கதறி அழுது கதிரையும் சக்தியையும் வரச்சொல்கிறான்.
அனைவரும் பதற்றத்துடன் மாடிக்கு ஓடி வர அந்த லெட்டரை சக்தி படிக்க அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். என்னுடைய மனைவி, பிள்ளைகள், அம்மா யாருமே சரியில்லை என சொல்லி கதிருக்கும் ஞானத்திற்கும் கடைசியாக வாழ்த்துக்கள் சொல்லி லெட்டரில் எழுதி வைத்துள்ளார். அவருக்கு தெரிந்த அனைவருக்கும் போன் செய்து அண்ணன் அங்கே வந்துள்ளாரா என விசாரிக்கிறார்கள்.
ஆடிட்டருக்கு போன் செய்தபோது, நேற்று இரவு தானே என்னிடம் போனில் பேசினார். நான் உங்களுடைய வீட்டுக்கு தான் வருகிறேன். நான் வந்து பேசுகிறேன் என சொல்லி போனை வைத்துவிடுகிறார் ஆடிட்டர். கதிர் அனைவரையும் பார்த்து பயங்கரமா கத்தி உடனே தர்ஷனை வீட்டுக்கு வரச் சொல்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
லெட்டர் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிய குணசேகரன் பற்றி ஒட்டுமொத்த குடும்பமும் பதற்றத்தில் இருக்க இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
ஆடிட்டர் குணசேகரன் வீட்டுக்கு வந்துள்ளார். "அண்ணன் என்ன தான் சார் சொல்லிட்டு போனாரு? தயவு செஞ்சு சொல்லுங்க சார் " என ஞானம் கேட்கிறான். ஆடிட்டர் பையில் இருந்து ஏதோ டாக்குமெண்ட்களை எடுத்து ஞானத்திடம் கொடுக்கிறார். அதை பார்த்து விசாலாட்சி அம்மா, கதிர், ஞானம் என அனைவரும் உடைந்து போய் அழுகிறார்கள்.
"எங்கயா போன? உன்ன புரிஞ்சுக்காதவங்களுக்கு நீ புதிர்யா, உன்ன புரிஞ்சுக்கிட்ட எனக்கு நீ உயிர்யா. காதெல்லாம் உன் குரலா கேக்குதுய்யா" கதறி அழுகிறான் கரிகாலன். கதிர் ஒரு பக்கம் உடைந்து போய் அழுகிறான். கலவர காடாக இருந்த குணசேகரன் வீடு இப்போது துக்கத்தில் அமைதியாய் இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் எதுவுமே புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதுதான் இன்றைய எதிர் நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
குணசேகரன் கதாபத்திரம் முடிக்கப்பட்டதா அல்லது வேறு ஒருவர் வரும் வரை கதைக்களத்தை திசைதிருப்பி இருக்கிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. என்ன தான் இந்த தொடர் நன்றாக ஒளிபரப்பாகி வந்தாலும் படபடவென அதிரடி செய்துகொண்டே இருக்கும் குணசேகரனின் குரல் ஒலிக்காமல் இருப்பது ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.