Ethirneechal : நீ செய்றது சரியில்ல... தர்ஷனை அவமானப்படுத்திய கதிர்... ஈஸ்வரி எடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சலில் நேற்று
Ethirneechal Sep 16 : அண்ணன் காசுல படிக்க மாட்ட ஆனா அவரு வாங்கிக்கொடுத்தது மட்டும் வேணுமா? என அனைத்தையும் தர்ஷனிடம் இருந்து பிடுங்கி அவமானப்படுத்துகிறான் கதிர். ...ஈஸ்வரி எடுத்த அதிரடி முடிவு....
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் தர்ஷன் மற்றும் ஈஸ்வரி வீட்டுக்கு வர அவர்களை முறைத்தபடி ஞானமும் கதிரும் வருகிறார்கள். எதுவும் புரியாமல் மற்றவர்கள் பார்க்க ஞானம் தர்ஷனிடம் "ஏன் போனை எடுக்கல? எத்தனை தடவை நாங்க மூணு பெரும் மாத்தி மாத்தி போன் பண்றோம் நீ எடுக்கவே இல்லை. எடுத்து பதில் சொல்ல வலிக்குதோ?" என கேட்கிறான்.
"போன் சைலன்ட்டில் இருந்தது அதனால் நான் பார்க்கவில்லை" என்கிறான் தர்ஷன். "சும்மா பொய் சொல்லாத. எதுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டல. குணசேகரன் மகன் ஃபீஸ் கட்டலன்னா அசிங்கம் இல்லையா?" என கேட்கிறான். "எனக்கு அந்த ஆள் காசுல படிக்க புடிக்கல" என தர்ஷன் சொல்கிறான். அதை கேட்டு எகிறி கொண்டு அவனை அடிக்க வருகிறான் கதிர். அவனை தடுத்து நிறுத்திய ஈஸ்வரி "என்னோட பிள்ளையை அடிக்கிற உரிமை இங்க எவனுக்கும் கிடையாது" என்கிறாள். "அப்போ நீங்க அவனுக்கு எல்லாத்தையும் சொல்லி தரீங்களா?" என கேட்கிறான் ஞானம்.
எங்க அண்ணன் காசுல படிக்க மாட்ட ஆனா அவர் வாங்கி கொடுத்த போன், செயின், வாட்ச், பைக் மட்டும் வேணுமா என சொல்லி அனைத்தையும் பிடுங்கி கொள்கிறான். இதை அனைத்தையும் குணசேகரன் மாடியில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறார். உடைந்துபோய் அழும் தர்ஷனை அனைவரும் சமாதானம் செய்கிறார்கள்.
அடுத்த நாள் காலை தர்ஷனை ஈஸ்வரி அழைத்து சென்று புதிய பைக் ஒன்றை வாங்கி கொடுக்கிறாள். "முதல் முதலில் நான் உனக்கு பைக் வாங்கி கொடுக்கிறேன் புதிய பைக் வாங்கலாம், யூஸ் பண்ண பைக் வேண்டாம். இரண்டு மாசம் பொறுத்துக்க முடியுமா நான் உனக்கு புது பைக் வாங்கி தரேன்" என சொல்கிறாள் ஈஸ்வரி. "இல்லமா எனக்கு இந்த பைக் ரொம்ப பிடிச்சு இருக்கு. நான் இதே எடுத்துக்குறேன்" என்கிறான் தர்ஷன். தர்ஷன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறான். இவர்கள் இருவரும் பைக் கடையில் இருப்பதை பார்த்த குணசேகரனின் ஆள் ஒருவர் ஞானத்திடம் போன் செய்து சொல்கிறான். ஞானம் விட்டுக்கொடுக்காமல் அவர்கள் அங்கு வந்து இருப்பது எங்களுக்கு தெரியும் என சமாளித்து விடுகிறான்.
பிறகு பைக்குக்கு கோயிலில் பூஜை போடுகிறார்கள். அந்த சமயத்தில் "நீ, நான் தர்ஷினி.. மூணு பேரும் வேறு வீட்டுக்கு போயிடலாம். நம்ம தேவைகளை நாமே பார்த்து கொள்ளலாம். நான் பார்ட் டைம் வேலைக்கு கூட போறேன்" என்கிறான் தர்ஷன். "வாங்க அம்மா வீட்டுக்கு போய் பைக்கை சித்திகளுக்கு காட்டணும் என ஆசையா இருக்கு" என்கிறான்.
அப்போது ஒரு பெண் வந்து ஈஸ்வரியை பார்த்து "உங்க ஸ்பீச்சை என் பையன் ஃபோனில் காட்டினான். நான் வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டேன். உங்க ஸ்பீச் கேட்டு தான் நான் மாறினேன். இப்போ நான் நல்லா இருக்கேன். நான் மட்டும் இல்ல நிறைய பேருக்கு உங்க ஸ்பீச் ரொம்ப பிடிக்கும். உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்" என்கிறார். பிறகு இருவரும் மிகுந்த மன நிறைவோடு வீட்டுக்கு செல்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)எபிசோட் முடிவுக்கு வந்தது.