EthirNeechal: 'கரிகாலன் பார்த்தா உயிர விட்டுருவானே’ : எதிர்நீச்சல் ஆதிரையிடம் ப்ரபோஸ் செய்த தனுஷ்..!
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடித்து வரும் சத்யா தேவராஜனின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடித்து வரும் சத்யா தேவராஜனின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு சின்னத்திரையை பொறுத்தவரை என்றைக்கும் வயது வித்தியாசம் இல்லாமால் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. என்றைக்கோ ஒளிபரப்பான எப்படியான பழைய சீரியல்களை தூசி தட்டி மறுஒளிபரப்பு செய்தாலும், மணிக்கணக்காக உட்கார்ந்து பார்ப்பவர்கள் ஏராளம். இப்படியான நிலையில் சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. வாரத்தின் 7 நாட்களும் செல்லும் இந்த சீரியலை இயக்குநர் திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியல் தான் பல மாதங்களாகவே டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன்றாக உள்ளது.
இந்த சீரியலில் இயக்குநர் மாரிமுத்து, பாம்பே ஞானம், மதுமிதா, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், கமலேஷ் ,கனிகா, தேவதர்ஷினி, சத்யா தேவராஜன், சத்தியப்ரியா, காயத்திரி கிருஷ்ணன், ராதிகா வைரவேலவன், விமல், இயக்குநர் திருச்செல்வம் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த சீரியல் ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் உள்ளிட்டவற்றைப் பற்றி பேசுகிறது. இதில் ஆதிரை செல்வி என்னும் கேரக்டரில் விஜே சத்யா தேவராஜன் நடிக்கிறார்.
இவர் சென்னையைச் சேர்ந்தவர். மாடலிங் துறையில் தனது கேரியரை தொடங்கிய சத்யா பின்னர் சன் மியூசிக் சேனலில் விஜேவாக சின்னத்திரையில் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அப்படித்தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "அருவி" சீரியலில் மலர் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சத்யா ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார். தற்போது எதிர்நீச்சல் சீரியலில் அவரின் ஆதிரை கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் சத்யா தேவராஜனின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரலாகியுள்ளது. நடிகர் தனுஷ் 2015 ஆம் ஆண்டு அனேகன் என்னும் படத்தின் நடித்திருந்தார். இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ரசிகர்களுடன் உரையாடும் நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்றிருந்தனர். அப்போது தனுஷிடம் ஒருவர், ’நீங்க படத்துல நிறைய ஹீரோயின்களுக்கு லவ் ப்ரபோஸ் பண்ணி பார்த்திருக்கேன். நிஜத்துல இப்ப இந்த நிகழ்ச்சியில இருக்க பொண்ணுங்க யார்கிட்டயாவது உங்க ஸ்டைலில் ப்ரபோஸ் பண்ண முடியுமா? எனக் கேட்டார்.
View this post on Instagram
உடனே தனுஷ், ‘உனக்கு என்ன பிடிச்சிருக்கா. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். ஐ லவ் யூ’ என நடிகர் கார்த்திக் குரலில் அழகாக ப்ரபோஸ் செய்கிறார். இந்த பதிலை சத்யா தேவராஜன் மகிழ்ச்சியடையும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. இதனைப் பார்த்த இணையவாசிகள், ‘இதெல்லாம் கரிகாலன் பார்த்தா உயிர் விட்டுருவானே’ என நக்கலாக பதிலளித்து வருகின்றனர்.