Ethir neechal Sep 14 Promo: ரேணுகா கொடுத்த பதிலடி... அரண்டு போன ஞானம்... எதிர் நீச்சலின் அடுத்த குணசேகரன் வந்துட்டாரா?
Ethir neechal September 14 promo : ரேணுகா கொடுத்த அதிரடியான பதிலால் ஆடிப்போன குணசேகரன் குடும்பத்தினர். இன்றைய எதிர் நீச்சல் எபிசோடில் என்ன நடக்கிறது?
![Ethir neechal Sep 14 Promo: ரேணுகா கொடுத்த பதிலடி... அரண்டு போன ஞானம்... எதிர் நீச்சலின் அடுத்த குணசேகரன் வந்துட்டாரா? Ethir neechal September 14 today episode promo Ethir neechal Sep 14 Promo: ரேணுகா கொடுத்த பதிலடி... அரண்டு போன ஞானம்... எதிர் நீச்சலின் அடுத்த குணசேகரன் வந்துட்டாரா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/14/bda2273ede874193f5d73e8b2c92eca61694674450488572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேணுகாவை பார்ப்பதற்காக வந்த ஐஸ்வர்யாவின் பள்ளி ஆசிரியர் மற்றும் இரண்டு பிள்ளைகளையும் மாடியில் ஒரு ரூமுக்கு வேகவேகமாக அழைத்துச் சென்றதால் அனைவரும் சந்தேகப்படுகிறார்கள். அவர்களின் சந்தேகத்தை மேலும் தூண்டும் விதமாக கரிகாலன் இன்னும் கொஞ்சம் ஏத்தி விடுகிறான்.
ரேணுகாவை வேவு பார்ப்பதற்காக கரிகாலன் ரூமுக்கு வெளியிலேயே நிற்க அவனை பயங்கரமாக திட்டி விரட்டி விடுகிறாள் ரேணுகா. பிறகு குழந்தைகளுக்கு சில முத்திரைகளை சொல்லி கொடுக்கிறாள். தன்னுடைய அம்மாவை பார்க்க சென்ற நந்தினி அவர்களுக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுத்து கேட்டரிங் பிசினஸ் தொடங்கி இருப்பதைப் பற்றி சொல்கிறாள். அவர்களும் சந்தோஷப்படுகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
நந்தினி தன்னுடைய அம்மா அப்பாவுடன் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருப்பதை ஜனனி பார்த்து மகிழ்கிறாள்.
மறுபக்கம் வீட்டுக்கு வந்து இருந்த டீச்சர் மற்றும் அந்த குழந்தைகளை வழி அனுப்புவதற்காக ரேணுகா மாடியில் இருந்து வருகிறாள். ஞானம் ரேணுகாவிடம் "ஐஸ் எங்க? உன்னைய தான் கேட்குறேன்?" என மிரட்டிக் கேட்க, ரேணுகா என்ன சொல்லி சமாளிப்பது எனத் தெரியாமல் யோசிக்கிறாள்.
ரேணுகா எப்படி இந்த பிரச்சினையை சமாளிக்க போகிறாள் என பதட்டத்துடன் இருக்கிறாள். அதற்குள் கரிகாலன் "என்ன மண்டையை சொறியறீங்க, கையை சொடுக்கு போடுறீங்க? முழிய பாருங்க முழியே சரியில்ல" என ஞானத்தை ஏத்தி விடுகிறான். அதைக் கேட்டு கடுப்பான ரேணுகா "உங்களுக்கு பயந்து பயந்து எல்லாம் இனிமேல் இருக்க முடியாது. காலம் பூரா உங்க அண்ணனுக்கு கூஜா தூக்குறதுனு முடிவு பண்ணிட்டீங்க இல்ல, அந்த வேலையை மட்டும் பாருங்க" என ஒரு போடு போடுகிறாள்.
இதை சற்றும் ரேணுகாவிடம் இருந்து எதிர்பார்க்காத ஞானம் அப்படியே உறைந்து போய் நிற்கிறான். விசாலாட்சி அம்மாவும் ரேணுகா பேசியதைக் கேட்டு மிரண்டு போகிறார். பிறகு டீச்சரையும் அந்த பிள்ளைகளையும் வழி அனுப்பி வைக்கிறாள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முதல் ஆதி குணசேகரனாக மாரிமுத்து இருக்க மாட்டார் என்பது ரசிகர்களுக்கு மிகவும் வருத்தமான ஒரு விஷயம். புதிய குணசேகரனாக மூன்று நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
நடிகர் மற்றும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அவர் சினிமாவில் பிஸியாக இருப்பதால் இன்னும் அவர் ஒப்பந்தமாகவில்லை என கூறப்டுகிறது.
அடுத்ததாக எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் வெளுத்து கட்டும் நடிகர் ராதாரவி மற்றும் பசுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.
அடுத்ததாக யார் ஆதி குணசேகரனாக வருவார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள் ரசிகர்கள் என்றாலும் நடிகர் மாரிமுத்துவின் இழப்பு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)