Ethir neechal july 12 episode : இனிமே அதிரடிதான்.. உண்மையை உடைத்த கௌதம்... பிளானை மாற்றிய ஜீவானந்தம்.. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
* குணசேகரனை அவமதித்த தர்ஷினி* ஜீவானந்தத்திடம் ஜனனி பற்றிய உண்மையை உடைத்த கௌதம்* முதலிரவுக்கு தயாரான கரிகாலன்நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடில் என்ன நடந்தது
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் மிகவும் பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீவானந்தம், பட்டம்மாள் ஷேர் ஆக்கிரமிப்பில் மிக அருகில் நெருங்கி விட்டார். அதற்கான வேலைகளை முன்னின்று செய்யும் பொறுப்பினை கௌதமிடம் ஒப்படைத்துள்ளார். மறுபக்கம் ஜனனி கைரேகையை அப்பத்தாவிடம் இருந்து எடுத்தது யார் என்ற தேடுதலில் இறங்கிவிட்டாள். அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது? என்பதை பார்க்கலாம்.
சமையலை குறை கூறி கொண்டு இருக்கும் குணசேகரனிடம், கரிகாலன் தர்ஷினி தன்னை அடிக்க கை ஓங்கியதை பற்றியும் அவள் கராத்தே எல்லாம் பயின்றவள் என்பதை பற்றியும் குணசேகரிடம் உடைக்க கோபத்தில் தர்ஷினியை அழைத்து "அவனை எப்படி நீ அடிக்க கை ஓங்கலாம். உன்னுடைய அத்தை ஆதிரையின் கணவர் அவர். உனக்கு மாமா முறை வேண்டும். மன்னிப்பு கேள்" என சொல்கிறார் குணசேகரன். ”மன்னிப்பா நான் ஏன் மன்னிப்பு கேக்கணும்? நான் என்ன தப்பு பண்ணேன்? மன்னிப்பு கேட்க முடியாது. என் சுயமரியாதையை விட்டு கொடுக்க முடியாது” என சொல்லிவிட்டு மாடிக்கு சென்று விடுகிறாள் தர்ஷினி. குணசேகரன் ஞானத்திடம், “என்ன இப்படி ஆரம்புச்சுருச்சுங்க? நேத்து உன்னோட மக இன்னிக்கு என்னோட மக. இது எல்லாத்துக்கும் காரணம் இவதான்” என ஜனனியை பார்த்து சொல்லி அவளை வீட்டைவிட்டு வெளியே போகச்சொல்கிறார். இதை முதலில் சரி செய்ய வேண்டும். ஆதிரையில் இருந்து தொடங்கலாம். நாலு நாளா தள்ளிப்போன சடங்கு இன்னைக்கு நடக்கணும். நல்ல நேரம் பார்த்து சடங்குக்கு ரெடி பண்ணுங்க என சொல்லிவிட்டு போகிறார் குணசேகரன்.
கெளதம் ஜீவானந்தத்தை பார்க்க செல்கிறான். செல்லும் வழியில் ஜனனியும் சக்தியும் அப்பத்தாவின் சொத்து பற்றி பேசியதும் கைரேகையை எடுத்தது பற்றியும் யோசித்துக் கொண்டே போகிறான். ஜீவானந்தத்திடம் சென்று குணசேகரன் தவறான முறையில் சொத்து சேர்த்து இருந்தாலும் அதற்கு மூலதனம் பட்டம்மாளுடையது. அப்படி இருக்கையில் அதை எப்படி நாம் எடுப்பது சரியானதாக இருக்க முடியும் என சொல்லி பட்டம்மாளுக்கு ஆதரவாக கௌதம் பேசுகிறான். அதை கேட்ட ஜீவானந்தம் கோபப்பட்டு இதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது அதை கௌதம் மறைப்பதை கண்டுபிடித்து விடுகிறார். நான் ஜனனியின் நண்பன் என்பதை கெளதம் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பர்ஹானா கோபப்பட்டு கௌதமை வெளியே அனுப்ப சொல்கிறாள்.
கெளதம் ஜனனியிடம் எந்த விஷயத்தையும் சொல்லாததை பற்றியும் சிசிடிவி ஃபுட்டேஜ் பற்றியும் ஜீவானந்தத்திடம் சொல்கிறான். பிறகு ஜீவானந்தம், ”இனி பட்டம்மாள் விஷயத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம். நீங்கள் எங்களுடன் நில்லுங்கள். அது போதும்.” என்கிறார் ஜீவானந்தம்.
கரிகாலன் முதலிரவுக்கு தயாராக இருக்கிறான் ஆனால் ஆதிரையை தயார் செய்யாமல் அனைத்து பெண்களும் சமையலறையில் உட்கார்ந்து இருக்கிறார்கள். குணசேகரன், கரிகாலன் மற்றும் ஞானம் மூவரும் என்ன நிலைமை என்பதை பார்க்க செல்கிறார்கள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது. அங்கே சென்று பார்த்த பிறகு மீண்டும் ஒரு ஏழரையை கூட்டுவார் குணசேகரன். என்ன நடக்கப்போகிறது என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.