Ethir neechal August 2nd episode : ஜீவானந்தம் பற்றி ஜனனிக்கு கிடைத்த கிளு... குணசேகரன் அடுத்த மூவ் என்ன? எதிர்நீச்சலில் நேற்று
* நடன ஆசிரியையாக அவதாரம் எடுத்த ரேணுகா * ஜீவானந்தம் பற்றி ஜனனிக்கு கிடைத்த தகவல்* குணசேகரன் சென்னையில் சந்திக்க போகும் நபர் யார்?எதிர்நீச்சல் சீரியலில் நேற்று
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வரியாவின் பள்ளியில் குழந்தைகளுக்கு நடனம் கற்று தரும் ஆசிரியர் வரமுடியாது என கூறியதால் ரேணுகா அவர்களுக்கு கற்று கொடுக்க நான் முயற்சிக்கிறேன் என சொல்கிறாள். பள்ளி ஆசிரியை இன்றைக்கே நல்ல நாள். அதனால் இன்னைக்கே கொஞ்சமாக ஆரம்பிக்கலாம் என கூறுகிறார். அதனால் ரேணுகா குழந்தைகளுக்கு இன்று சொல்லிக் கொடுக்கிறேன் என அருமையாக ஆடி அனைவரையும் அசத்தி விடுகிறார்.
ஜீவனந்தத்தால் பாதிக்கப்பட்ட நபருக்காக பெண் போலீஸ் அதிகாரி, சக்தி மற்றும் ஜனனி காத்துகொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் அவர் வருகிறார். நீங்கள் தான் குணசேகரன் பேமிலியா என கேட்கிறார். எதிரில் இருப்பது போலீஸ் அதிகாரி என தெரிந்ததும் அலறி அடித்துக் கொண்டு கிளம்புகிறார். "ஜீவனந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் தான் நீங்கள் கூப்பிட்டதும் வந்தேன். ஆனால் போலீசை வைத்து கொண்டே பேசுறீங்க. ஜீவானந்தத்திற்கு தெரிந்தால் அவ்வளவு தான்" என்கிறார். ஜனனி அவரிடத்தில் "அவங்க அஃபிஷியலா வரவில்லை எங்களுடைய ப்ரெண்டா தான் வந்து இருக்காங்க" என சொல்கிறாள். "பணத்தையும் பறிகொடுத்து உயிரையும் கொடுக்க முடியாது" என்கிறார் அந்த நபர். "அவங்களுக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இப்ப தான் நாங்க அவங்கள பாக்குறோம். நான் குணசேகரன் தம்பி இது என்னுடைய மனைவி" என்கிறான் சக்தி. அதற்கு பிறகு தான் வந்த அந்த நபர் அமைதியாகிறார்.
"நிச்சயமா நாங்க போலீஸுக்கு போக மாட்டோம். ஜீவானந்தம் பற்றிய பேக் கிரவுண்ட் என்ன என்பது தெரிந்தால் தான் எங்களால் அடுத்து என்ன செய்வது என பிளான் செய்ய முடியும்" என கேட்கிறாள் ஜனனி. "அவனை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கொடைக்கானல் அருகில் இருக்கும் கவுஞ்சி தான் என்னுடைய சொந்த ஊர். என்னுடைய இடத்தை பிடுங்கி அந்த ஊரில் இருக்கும் மக்களுக்கு கொடுத்துவிட்டான். அவனை பற்றி கேட்டலே என்னை அடிக்க வருகிறார்கள் அந்த ஊர் மக்கள்" என்கிறார் அந்த நபர்.
இந்த தகவல் போதும் நான் பார்த்து கொள்கிறேன் என ஜனனி சொல்ல "நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க. ஆனா தயவு செய்து என்னை மட்டும் மாட்டி விட்டுராதீங்க. நீங்களும் உங்க குடும்பத்தில் இருக்கிறவங்களும் ஜாக்கிரதையா இருங்க" என சொல்லவிட்டு செல்கிறார் அந்த நபர். ஜனனி தீவிரமாக என்ன செய்வதென யோசித்து கொண்டு இருக்கிறாள்.
சென்னை சென்ற குணசேகரனும் கதிரும் தங்கும் இடத்திற்கு சென்று அந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்க்கு போன் செய்கிறார். "இப்போ கிளம்பி வரீங்களா? என கேட்க அவர் இப்போது வேண்டாம் நாளை காலை திருவான்மியூர் பீச்சில் சந்திக்கலாம்" என்கிறார். "நீங்க ஏன் அவரை இவ்வளவு நம்புறீங்க ?" என கதிர் குணசேகரனிடம் கேட்கிறான். "அந்த ஆள் பயங்கரமான ஆள். சரியான ரவுடி. ஜீவானந்தம் போன்ற ஆட்களுக்கு முடிவு கட்ட இவன மாதிரி கிறுக்கு பய தான் சரியான ஆள். அதனால் தான் இவனை குறி வைத்து வந்திருக்கிறேன். ஒரு வாரமா நம்மள புலம்ப விட்டுட்டான் இல்ல. அவனை சும்மா விட கூடாது " என குணசேகரன் சொல்கிறார். "அப்பத்தாவுக்கும் இந்த ஆளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கும். வேற வழியில உறவா இருக்குமா? " என கதிர் கேட்கிறான். "அவன் என்ன உறவா வேணாலும் இருக்கட்டும் அவனை முடிக்க வேண்டும் அப்போ தான் நம்மால் மதுரையில் நடமாட முடியும்" என்கிறார். நாளே நாட்களில் உனக்கு ஒரு முடிவு காட்டுறேன் ஜீவானந்தம் என சவால் விடுகிறார் குணசேகரன். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.