Ethir neechal August 28 : ஜீவாவை சந்திக்கப்போகும் மருமகள்கள்.. அப்பத்தாவின் முடிவு என்ன? எதிர்நீச்சல் அப்டேட்
* கதிரிடம் சண்டையிடும் நந்தினி*ஜீவானந்தம் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தை நினைத்து ஈஸ்வரி வருத்தம்*ஜீவானந்தம் வீட்டில் அப்பத்தாவை சந்திக்க செல்லும் மருமகள்கள்நேற்று எதிர் நீச்சல் எபிசோட்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கதிரிடம் நந்தினி சண்டையிடுகிறாள். "ஏன் அப்படி பண்ண? நீ எதற்கும் துணிந்தவன்" என ஜீவானந்தம் மனைவியை கொலை செய்ததை மனதில் வைத்து அவனை பயங்கரமாக திட்டுகிறாள். அவள் எங்கே உண்மையை சொல்லிவிட போகிறாள் என பயந்த ரேணுகா நந்தினியை தடுத்து "தாராவை இவங்க அண்ணன் கீழே தூக்கி போட்டு விடுவேன் என மிரட்டியதை பற்றி தானே சொல்ற" என சொல்லி அதை திசை திருப்பி விடுகிறாள். கதிர் "எங்க அண்ணன் இதை வெளியே தூக்கி போட்டால் கூட பரவாயில்லை. அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு" என சொல்ல தாரா "அவர் யாரு ? அவருக்கு ரைட்ஸ் இல்ல..." என்கிறாள். அதை கேட்டு கதிர் அடிக்க வருகிறான்.
இது அனைத்தையும் கீழே உட்கார்ந்து கேட்டு கொண்டு இருக்கும் குணசேகரன் நந்தினி, ரேணுகாவை கீழே அழைக்கிறார். அப்பத்தாவை பார்த்து பேசி சொத்தை வாங்கி வரும் வேலையை பார்க்க சொல்கிறார். கதிர் "இவளுங்க ஒன்னும் பண்ண வேண்டாம். நாம பாத்துக்கலாம்" என சொல்ல குணசேகரன் "நமக்கு காரியம் தான் முக்கியம். நீ கொஞ்சம் அமைதியா இரு பா. நான் ஒண்ணுக்கு இரண்டு பிரஷர் மாத்திரை சாப்பிட்டு உயிரை கையில் பிடித்து வைத்து இருக்கிறேன்" என்கிறார்.
உடனே நந்தினி "நீங்க உயிரோட இருந்தா தானே மாமா மத்தவங்க உயிரை எடுக்க முடியும்" என்றதும் கதிர் அவளை அடிக்க கை ஓங்குகிறான். விசாலாட்சி அம்மா தடுத்துவிடுகிறார். பிறகு ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி மற்றும் ஜனனி வீட்டில் இருந்து அப்பத்தாவை சந்திப்பதற்காக கிளம்புகிறார்கள்.
அப்பத்தா எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் ஜீவானந்தத்தோடு தான் இருப்பார் என்கிறாள் ஜனனி. ரேணுகா, ஈஸ்வரியிடம் "உங்களுக்கு ஒன்னும் சங்கடமா இல்லையே. உங்களுக்கு தெரிந்தவர் என சொன்னீங்க. மறந்துபோன பழசை எல்லாம் ஞாபக படுத்துற மாதிரி இல்லையா" என கேட்கிறாள்.
"அவர் என்னுடைய வாழ்க்கையில் கடந்து போக கூடிய ஒரு நபராக தான் இருந்தார். அப்போ பார்த்த முகம் எனக்கு ஞாபகத்திலேயே இல்லை. இப்போ பார்த்தது தான் மனதில் நிற்கிறது. அன்னைக்கு அவர் இந்த விஷயத்தை சொல்லி என்னை காயப்படுத்தணும்னு நினைக்கவில்லை. எனக்கு தெரிய வைக்கணும் என்பதுதான் அவரின் நோக்கமாக தெரிந்தது. ஆனால் அவருடைய வாழ்க்கையில் இப்படி ஒரு சங்கடம் அதுவும் என்னை சார்ந்த ஒரு நபரால் நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை" என்றாள் ஈஸ்வரி.
ஜனனியை கௌதமுக்கு போன் செய்து ஜீவானந்தம் எங்கே இருக்கிறார் என கேட்க சொல்கிறாள் ரேணுகா. ஜனனி பேச சங்கடப்படவே ஈஸ்வரி கௌதமுக்கு போன் செய்கிறாள். ஆனால் கெளதம் போன் எடுக்காததால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்கிறாள். அதை ஃபர்ஹானா எடுத்து பேசுகிறாள். அவளிடம் ஈஸ்வரி ஜீவானந்தம் இருக்கும் இடம் பற்றி விசாரிக்கிறாள். முதலில் முடியாது என சொல்லிவிட்டு பிறகு அவரை நீங்கள் எந்த விதத்திலும் காயப்படுத்திவிடக்கூடாது. இது வேறு யாருக்கும் தெரிய வைக்கவும் கூடாது” என சொல்லி ஜீவானந்தம் இருக்கும் இடத்தின் விலாசத்தை கொடுக்கிறாள்.
அவர்கள் அனைவரும் ஜீவானந்தத்தை பார்க்க செல்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.