Ethirneechal Aug 16: ஜீவானந்தத்துக்கு செக் வைச்சாச்சு... பரபரப்பான கட்டத்தை நெருங்கும் எதிர் நீச்சல்.. நேற்றைய எபிசோட்!
Ethir neechal Aug 16th Episode Update : ஜீவானந்தத்தை போட்டுத் தள்ள தயாராக இருக்கும் வளவன் குரூப் ஒரு பக்கமும், அவரை சந்தித்துப் பேச வேண்டும் என ஜனனி ஒரு பக்கமும் ஜீவானந்தம் வீட்டுக்கு செல்கிறார்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம் தனது சொந்த ஊரான கவுஞ்சில் வந்து இறங்கி தனது மனைவி மகளை பார்ப்பதற்காக ஊருக்குள் நடந்து வந்து கொண்டு இருக்கிறார். வளவனும் கதிரும் ஆட்களுடன் ஜீவானத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதிக நேரமானதால் கடுப்பான கதிர் வளவனை பயங்கரமாக திட்டுகிறான். வளவனுக்கு கதிர் குரலை உயர்த்தி கத்துவதால் கடுப்பாகிறார்.
மறுபக்கம் சக்திக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றுவதற்காக ஈஸ்வரி அனைத்தையும் தயராக வைத்திருக்கிறாள். வீட்டில் உள்ள அனைவரும் அருகில் வராமல் தள்ளியே இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் குணசேகரன் வந்து நக்கலாக "என்ன கண்காட்சி நடக்குதா?. வியாதியெல்லாம் அதை கொண்டாட கொண்டாட தான் ஓட்டிகிட்டு இருக்கும். அப்படியே துடைச்சு எறிஞ்சுட்டு போயிட்டே இருக்கணும்" என்கிறார். நந்தினி உடனே "எல்லாரும் உங்கள மாதிரி இருக்க முடியுமா? நாங்க எல்லாம் மனுஷ பிறவி, நீங்க தெய்வப் பிறவி இல்ல" என நக்கலாக சொல்கிறாள். முகம் சுருங்கி போன குணசேகரன் அடுத்தது ஈஸ்வரியை வம்புக்கு இழுக்கிறார்.
"ஈஸ்வரி சொத்து விஷயமாக ஊருக்கு போனானு கேள்விப்பட்டேன் ஆனா அவ சக்திக்கு பணிவிடை செய்துட்டு இருக்கா. என்னைத் தவிர மத்தவங்க எல்லார் மேலையும் அவ அன்பா தான் இருக்கறா" எனக் கூறுகிறார் குணசேகரன். இன்னும் இரண்டு நாட்களில் எல்லாம் அடங்கிவிடும் என சொல்லிவிட்டு வெளியே கிளம்புகிறார்.
கவுஞ்சியில் ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக பெரியவர் வீட்டில் காத்து கொண்டு இருக்கிறாள். பெரியவரின் மனைவி வந்து தனது மகள் மண் சரிவில் சிக்கி இறந்தது பற்றி சொல்லி வருத்தப்படுகிறார். அந்த நேரத்தில் பெரியவர் வந்து "ஜீவானந்தம் வருவதாக தகவல் வந்திருக்கு. அவரோட வீட்டுக்கு மலையேறி போகணும். அடிவாரம் வரைக்கும் நான் உன்னை அழைச்சிட்டு போறேன். அதுக்கு அப்பறம் நீ போவீயா" என சொல்லி அழைத்துச் செல்கிறார். கதிர் இருக்கும் இடத்தைத் தாண்டி தான் அவர்கள் செல்கிறார்கள், ஆனால் கதிரும் ஜனனியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
பெரியவர் ஜனனியை மலையடிவாரத்தில் விட்டு விட்டு பத்திரமாகச் செல்ல சொல்கிறார். வளவனின் ஆட்களில் ஒருவன் ஓடிவந்து ஜீவானந்தம் இன்று வருவதைப் பற்றி சொல்லியும் அவரின் வீட்டை கண்டுபிடித்து விட்டதை பற்றியும் சொல்கிறான். அவர்கள் அனைவரும் வீட்டைச் சுற்றி வளைக்க செல்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.
இனி என்ன நடப்போகிறது எனத் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக காத்திருருக்கிறார்கள் எதிர் நீச்சல் சீரியலின் தீவிர ரசிகர்கள்!