Baakiyalakshmi Serial: விவாகரத்து வழங்கிய நீதிமன்றம் ... அதிர்ச்சியில் கோபி...என்ன செய்யப்போகிறார் பாக்யா?
நேற்றைய எபிசோடில் கோபிக்கு விவாகரத்து வழங்க இளைய மகன் எழிலுடன் கோர்ட்டுக்கு புறப்படும் காட்சிகளும், அதனை தொடர்ந்து பாக்யாவை பழிவாங்க எண்ணி கோபி கோர்ட்டுக்கு செல்லும் காட்சிகளும் ஒளிபரப்பாகின.
![Baakiyalakshmi Serial: விவாகரத்து வழங்கிய நீதிமன்றம் ... அதிர்ச்சியில் கோபி...என்ன செய்யப்போகிறார் பாக்யா? baakiyalakshmi serial today promo released baakiya got divorced from gopinath Baakiyalakshmi Serial: விவாகரத்து வழங்கிய நீதிமன்றம் ... அதிர்ச்சியில் கோபி...என்ன செய்யப்போகிறார் பாக்யா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/04/3fd522bad86fc5ad764356a56b2bb6fd1659594014_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாக்கியலட்சுமி சீரியலில் புதிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரம் முழுக்க வீட்டை விட்டு வெளியேறிய பாக்யாவை குடும்பத்தினர் வந்து சமாதானப்படுத்துவது, குழந்தைகளுக்காக பாக்யா மீண்டும் வீட்டுக்கு வந்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.
நேற்றைய எபிசோடில் கோபிக்கு விவாகரத்து வழங்க இளைய மகன் எழிலுடன் கோர்ட்டுக்கு புறப்படும் காட்சிகளும், அதனை தொடர்ந்து பாக்யாவை பழிவாங்க எண்ணி கோபி கோர்ட்டுக்கு செல்லும் காட்சிகளும் ஒளிபரப்பாகின. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் கோர்ட்டில் நீதிபதியிடம் பாக்யா அவர் கேட்கும் மாதிரி நான் விவாகரத்து தர தயார் என கூறுகிறார். அதற்கு நீதிபதி ஆம்பளைங்க ஈஸியா சொல்லிட்டு போயிடுவாங்க...நீங்க நல்லா யோசிச்சி தான் சொல்றீங்களா.. என கேட்கிறார்.
பாக்கியா 🔥
— Vijay Television (@vijaytelevision) August 4, 2022
பாக்கியலட்சுமி - திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VIjayTelevision pic.twitter.com/9WBcJFbVen
அதற்கு பாக்யா என்னதான் கணவன் மனைவி உறவா இருந்தாலும் ஒருத்தரை அண்டி பிழைக்கிறது பெரிய அவமானம்...சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் உள்ள யாராக இருந்தாலும் இங்க பிழைக்க ஆயிரம் வழி இருக்கு என கூறுகிறார். உடனே நீதிபதி நீங்கள் 2 பேரும் நல்லா யோசிச்சி தான் இந்த முடிவு எடுத்துள்ளீர்கள். அதனால் உங்களுக்கு இந்த நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது என தெரிவிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் பாக்யாவின் அடுத்தக்கட்ட மூவ் என்ன என தெரியாமல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
முன்னதாக இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் கோபி, பாக்யா முடிவால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி, எல்லா பிரச்சனைக்கும் காரணம் ராதிகா தான் என கூறி அவரிடம் சண்டையிட செல்லும் காட்சிகள் இடம் பெறவுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)