Baakiyalakshmi serial August 17 :எழிலை தேடி வந்து அசிங்கப்படும் கோபி... ஈஸ்வரி சொல்லியும் கேட்காத பாக்கியா.. பாக்கியலட்சுமியில் இன்று
Baakiyalakshmi serial Today : எழில் வீட்டைவிட்டு போனது பற்றி ஈஸ்வரிக்கும் பாக்கியாவும் நடைபெற்ற வாக்குவாதம். எழில் இருக்கும் இடம் தேடி சென்று உசுப்பேத்தும் கோபி...சிறகடிக்க ஆஸியில் இன்று.

Baakiyalakshmi Serial August 17 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் வீட்டை விட்டு போன கவலையில் பாக்கியா குடும்பத்தில் உள்ள அனைவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். பாக்கிய ஈஸ்வரிக்கு ஏதாவது வேணுமா அந்த கேட்கிறாள். "எனக்கு எதுவும் வேணாம் பாக்கியா. நீ கொஞ்ச இப்படி உட்காரு. எழில் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் அப்படி சொன்னேன். எல்லாரோட ஆசையும் நிறைவேறணும் என ஏதாவது இருக்கா என்ன. நான் என்ன உடனேயே அவனை குழந்தை பெத்துக்க சொன்னேன். அவனும் இவ்வளவு நாள் முயற்சி செய்து தானே பார்த்தான், அடுக்கு அப்புறம் தானே நான் சொன்னேன். அவன் வீட்டை விட்டு எல்லாம் போவான் என நான் நினைக்கவில்லை. அவனுக்கு போன் பண்ணி வீட்டுக்கு வர சொல்லு பாக்கியா " என வருத்தப்பட்டு பேசுகிறார் ஈஸ்வரி.
"அவன் சாதிச்சிட்டு இந்த வீட்டுக்கு திரும்ப வரட்டும் அத்தை. நான் சொல்ற எல்லா விஷயத்தை செய்ற என்னோட பையன் இந்த விஷயத்தில் மட்டும் பிடிவாதமா இருக்கான் அப்படினா அது அவனுக்கு எவ்வளவு புடிச்ச விஷயமா இருக்கும். அவன் நிச்சயம் ஒரு நாள் படம் எடுப்பான். எடுத்துட்டு பெரிய ஆளா திரும்பி இந்த வீட்டுக்கு வருவான். நமக்கு அது கஷ்டமா தான் இருக்கும்" என சமாதானப்படுத்துகிறாள் பாக்கியா.
இனியாவுக்கு கோபி போன் பண்ணி பேசுகிறார். வீட்டில் நடந்த சண்டை பற்றியும் எழில் வீட்டை விட்டு போனது பற்றியும் கோபியிடம் சொல்லி வருத்தப்படுகிறாள் இனியா. பாக்கியா சொன்னதை கேட்டு தான் எழில் வீட்டை விட்டு போனது பற்றியும் சொல்கிறான்.
கோபி எழிலுக்கு போன் செய்து பார்க்கிறார் ஆனால் போன் ஆஃப் செய்து இருக்கவும் அமிர்தாவுக்கு போன் செய்கிறார் கோபி. "இவர் எதுக்கு இப்போ போன் பண்ணனும். எதையும் அவர்கிட்ட சொல்லாத" என எழில் அமிர்தாவிடம் சொல்கிறான்.
கோபி அமிர்தாவிடம் "இப்போ தான் இனியா வீட்டில் நடந்த விஷயத்தை சொன்னா. எங்க இருக்கீங்க? எந்த இடம்" என எல்லாத்தையும் விசாரிக்கிறார். அவருடைய கிச்சன் பக்கத்தில் தான் இருக்கிறது என சொல்லி அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு வருகிறார். பாக்கியா இப்படி வீட்டை விட்டு அனுப்பி இருக்க கூடாது என பாக்கியா மீது கோபத்தை திருப்பி விடுகிறார். "என்ன எங்க அம்மா மேல எனக்கு கோபம் வரணும் என பேசுறீங்களா?" என திருப்பி கேட்கிறான் எழில். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

