மேலும் அறிய

Baakiyalakshmi: பாக்கியாவை கெஞ்சவிடும் ராதிகா... கோபியின் பரிதாப நிலை... பாக்கியலட்சுமியில் இன்று!

Baakiyalakshmi Sep 26: அமிர்தாவின் அம்மா கணேஷூக்கு போட்ட கண்டிஷனால் அதிர்ச்சி. பண நெருக்கடியால் டென்ஷனாக இருக்கும் கோபி. பாக்கியாவுக்கு ராதிகா வைத்த செக் பாய்ண்ட். பாக்கியலட்சுமியில் இன்று!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் மாலினி செழியனுக்கு சர்ப்ரைஸாக வாட்ச் ஒன்றை பரிசளிக்கிறாள். செழியன் ரொம்ப நாளாக ஆசைப்பட்ட வாட்ச் என்பதால் அவன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறான்.

கணேஷ் வீட்டுக்கு அமிர்தாவின் அம்மா வந்து "இனி கணேஷ் அமிர்தாவின் வாழ்க்கையில் தலையிடக் கூடாது. அமிர்தாவுக்கு இன்னொரு கல்யாணம் ஆனது உங்க பையனுக்கு தெரியாம பாத்துக்குறது உங்களோட பொறுப்பு. பொண்டாட்டி பிள்ளை என சொல்லிக்கிட்டு அவர் உறவு கொண்டாடிட்டு வந்து நிக்க கூடாது. பாவம் அவளும் ஒரு பொண்ணு தானே.

கணேஷ் மேல அவளும் உயிரா தான் இருந்தா. அவர் இறந்த பிறகும் மாமியார் மாமனார் என உங்க கூட தான் இருந்தா. இந்த இரண்டு வருஷம் அவ பட்ட கஷ்டம் போதும். அவளுக்கு இப்ப தான் நிம்மதியா ஒரு வாழ்க்கை அமைஞ்சு இருக்கு. நிலாவுக்கும் அப்பானா அது எழில் முகம் தான் தெரியும். இப்போ போய் குழந்தை கிட்ட எழில் உன்னுடைய அப்பா இல்லை, கணேஷ் தான் உன்னோட அப்பான்னு சொல்லமுடியுமா? அவளை தயவு செஞ்சு வாழ விடுங்கள்" என கணேஷ் அம்மா அப்பாவிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

Baakiyalakshmi: பாக்கியாவை கெஞ்சவிடும் ராதிகா... கோபியின் பரிதாப நிலை... பாக்கியலட்சுமியில் இன்று!

அந்த நேரம் கணேஷ் வர அமிர்தாவின் அம்மா பேசாமல் கிளம்பிவிடுகிறார். கணேஷ் அமிர்தா எங்கே எனத் தேடுகிறான். "நீ இனிமேல் அமிர்தாவை தேடி வரக்கூடாது என சொல்லிட்டு போறாங்கப்பா" என கணேஷிடம் சொல்கிறார் அவனின் அம்மா. "அவ என்னோட பொண்டாட்டி. நீங்க ஒளிச்சு வைச்சா என்னால தேடி கண்டுபிடிக்க முடியாதா? நான் நிச்சயமா அமிர்தாவை தேடிக் கண்டுபிடிப்பேன்" என சொல்லிவிட்டு கோபமாக ரூமுக்குச் சென்று விடுகிறான்.

கோபி ஆபிசில் மிகவும் டென்ஷனாக இருக்கிறார். அவரின் அக்கவுண்டில் பணம் போடவேயில்லை என்பதை பார்த்துவிட்டு மேனேஜரை அழைத்து சத்தம் போடுகிறார். அந்த நேரம் பார்த்து கோபியின் ஃப்ரெண்ட் செந்தில் அங்கே வந்து எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது என்பதால் வாங்கின பணத்தை திருப்பி கொடுக்க சொல்லி கேட்கிறார்.

கோபி தனக்காக ஒரு லோன் போட்டு கொடுக்க சொல்லி நண்பரிடம் கேட்டிறார். "எனக்கும் பணம் தேவைப்படுது, உன்னுடைய பணத்தையும் கொடுத்துடுவேன்" என்கிறார் கோபி. "ஏன் உனக்கு லோன் எடுத்து குடுத்துட்டு அதுக்கும் சேர்த்து  நான் பணம் கட்டவா. நீ வேலையே பார்க்காமல் பாக்கியா பின்னாடியே சுத்திகிட்டு இருக்க" என்கிறார் கோபியின் பிரெண்ட்.  

Baakiyalakshmi: பாக்கியாவை கெஞ்சவிடும் ராதிகா... கோபியின் பரிதாப நிலை... பாக்கியலட்சுமியில் இன்று!

பாக்கியா ராதிகாவை பார்த்து கேன்டீன் விஷயமாக பேசுவதற்காக ராதிகாவின் ஆபிசுக்கு வருகிறாள். நான் கொஞ்சம் வேலையா இருக்கேன் என சொல்லி பாக்கியாவை ரொம்ப நேரம் வெயிட் செய்ய வைக்கிறாள் ராதிகா.

பிறகு அனைவருக்கும் முன்னாடி நிற்கவைத்து "ஆறு மாசம் காண்ட்ராக்ட் முடிஞ்சுடுச்சு. உங்களோட இனி கேன்டீன் கான்ட்ராக்ட் தொடர விருப்பமில்லை" என்கிறாள் ராதிகா. "அதற்கான காரணம் என்ன? நான் கோடீஸ்வரன் சார் கிட்ட பேசணும்" என பாக்கியா கேட்கிறாள். "அவர் அமெரிக்கா போயிட்டார். வரதுக்கு இரண்டு மாசம் ஆகும். எங்கிட்ட தான் பொறுப்பை கொடுத்துட்டு போயிருக்கார்" என சொல்கிறாள் ராதிகா. பாக்கியாவும் செல்வியும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவுக்கு வந்தது.

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Embed widget