Baakiyalakshmi Aug 31: பாக்கியா மீது விழுந்த அபாண்டமாக பழி.. கொந்தளித்த கோபி.. மாட்டிக்கொண்ட செழியன்.. பாக்கியலட்சுமியில் இன்று!
* மயூவை பார்க்க சென்ற ஈஸ்வரி ராமமூர்த்தி* பாக்கியா மீது ராதிகா அம்மா போட்ட அபாண்டமான பழி* செழியனை கண்டிக்கும் பாக்கியா* கடுப்பேத்தும் கோபிஇன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் என்ன நடந்தது?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியா "அக்கா பண்ணறது எல்லாம் சரியே இல்லை. எவ்வளவு பட்டாலும் திருந்தவே மாட்டேங்குது" என அமிர்தாவிடம் சொல்லி கொண்டு இருக்கிறாள் செல்வி. அப்போது பாக்கியா அங்கே வந்து மயூவுக்கு லட்டு செய்ய பொருட்களை எடுத்து வைக்கிறாள். அதை பார்த்து அனைவரும் பாக்கியாவை திட்டுகிறார்கள். "மயூவுக்காக செய்யலாம் தப்பு கிடையாது. அவ நம்ம மேல எல்லாம் எவ்வளவு பாசமாக இருக்கிறாள்" என சொல்கிறாள் பாக்கியா.
அமிர்தாவிடம் கேன்டீனை பத்திரமாக பார்த்து கொள்ள சொல்கிறாள். "இரண்டு முறை பிரச்சனையாகி கேன்டீன் நம்ம கையை விட்டு போற அளவுக்கு போய்விட்டது. அதனால் நாம ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்" என சொல்கிறாள் பாக்கியா.
ராமமூர்த்தியும், ஈஸ்வரியும் ராதிகா வீட்டுக்கு சென்று மயூவை ஆசீர்வாதம் செய்கிறார்கள். ராதிகா கொடுக்கும் காபியை கூட ஈஸ்வரி வேண்டாம் என சொல்லிவிடுகிறார். மயூவுக்கு பாக்கியா செய்து கொடுத்த லட்டுவை ஊட்டிவிடுகிறார் ஈஸ்வரி. "இது பாக்கியா ஆண்ட்டி செய்த லட்டு தானே. எனக்கு போன் பண்ணி குடுங்க நானே அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்றேன்" என்கிறாள் மயூ. பாக்கியாவும் மயூவிடம் பாசமாக பேசுகிறாள்.
ராதிகா காபி கொடுத்தால் கூட அந்த அம்மா குடிக்கமாட்டாங்களாம். ஒரு வேலை ட்ரிப் போகவில்லை என ஸ்வீட்ல ஏதாவது கலந்து இருப்பாங்களா? என பேச அதை கேட்ட கோபி வந்து ராதிகாவின் அம்மாவை பயங்கரமாக திட்டுகிறார். "இல்ல மாப்பிள்ளை பாக்கியா ஏதாவது கலந்து இருந்தா" என சொல்ல "பாக்கியா மட்டும் கொலைகாரியா என்ன? எங்க வீட்ல யாருமே இந்த மாதிரி எல்லாம் யோசிக்க கூட மாட்டாங்க... தெரிஞ்சுக்கோங்க" என சொல்லிவிட்டு கோபமாக சென்று விடுகிறார். ராதிகாவும் அவளின் அண்ணனும் கூட அம்மாவை திட்டிவிட்டு சென்று விடுகிறார்கள்.
பாக்கியா ஜெனியிடம் போனில் பேசிக்கொண்டு இருக்கிறாள். "வீடு, கேன்டீன் பத்தி எல்லாம் யோசிச்சுகிட்டே இருக்காம ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க ஆண்ட்டி" என்கிறாள் ஜெனி. செழியன் போன் செய்தானா என ஜெனியிடம் கேட்கிறாள் பாக்கியா. "இல்லை ஆண்ட்டி. வளைகாப்பு முடிஞ்ச உடனே பை பை சொன்னவன் தான் பாப்பா பொறந்ததுக்கு அப்புறம் ஹாஸ்பிடல் வந்து தான் பார்ப்பான் பாருங்க" என்கிறாள். ஜெனியின் அம்மா சாப்பிட கூப்பிட்டதும் போனை வைத்து விட்டு சென்று விடுகிறாள் ஜெனி.
ராதிகா வீட்டில் இருந்து திரும்பிய ஈஸ்வரி பாக்கியாவிடம் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு செழியன் வந்து நான் நைட் ஜெனி வீட்டுல போய் தூங்கினேன் என பொய் சொல்கிறான். பாக்கியாவுக்கு சந்தேகம் வர அவனை தனியாக அழைத்து "உண்மையை சொல்லு செழியா நீ மறுபடியும் குடிக்குறியா? வேற ஏதாவது தப்பு பண்ணறியா? கொஞ்ச நாளாவே நீ சரியில்ல" என்கிறாள் பாக்கியா. செழியன் பாக்கியாவை எல்லாத்துக்கும் ஏதாவது சொல்லாத அம்மா என திட்டிவிட்டு சென்று விடுகிறான்.
கேரள ட்ரிப் போக அனைவரும் தயாராகிவிட்டார்கள். எழில் ட்ரைவரை அறிமுக படுத்தி வைக்கிறான். அந்த நேரத்தில் அங்கே கோபி வந்து டிரைவரை லைசென்ஸ் காமி, அனுபவம் என்ன?, ஹைவேஸ்ல வண்டி ஒட்டி இருக்கீங்களா? என நோண்டி நோண்டி கேள்வி கேட்கிறார். "நீ என்ன வேலைக்கா ஆள் எடுக்குற" என ராமமூர்த்தி கேட்டதும் "கேரளா வரைக்கும் என்னோட பொண்ணையும் அம்மாவையும் கூட்டிட்டு போறாங்க நான் டிரைவரை விசாரிக்க வேண்டாமா?" என்கிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.