Baakiyalakshmi Aug 30: அவமானப்பட்டு வெளியேறிய கோபி... ராதிகா வைத்த செக் பாய்ண்ட்... பாக்கியலட்சுமியில் இன்று நடக்கும் சம்பவம்!
* பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக மொத்த குடும்பமும் நிற்கிறது* ராதிகாவிடம் வாங்கி கட்டிக்கொண்ட கோபி* மயூ பங்ஷனுக்கு ஈஸ்வரியை போக சொல்லி வற்புறுத்தும் பாக்கியாஇன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் கோபி இனியாவை கேரளா ட்ரிப்புக்கு அழைத்து செல்ல முடியாததால் பாக்கியா அழைத்து செல்வதாக சொல்கிறாள். உடன் ஈஸ்வரியையும் செல்வியையும் துணைக்கு அழைத்து செல்வதாக பிளான் செய்துள்ளனர். இந்த விஷயத்தை கோபியிடம் இனியா போன் மூலம் சொல்ல டென்ஷனாகிறார் கோபி.
"நீ அந்த இடியட் கூட எல்லாம் போக தேவையில்லை. காலேஜ் பிரின்சிபல் கிட்ட பேசி ஒரு வாரம் டைம் கேட்கலாம். ஒரு வாரத்திற்கு பிறகு நானே உன்னை கூட்டிட்டு போகிறேன்" என கோபி சொல்ல "அப்படி போக முடியாது டாடி. இது முக்கியமான டூர்" என்கிறாள் இனியா. எதையும் புரிந்து கொள்ளாமல் கோபி மீண்டும் மீண்டும் அதையே சொல்லி கொண்டு இருக்க இனியா போனை கட் செய்து விடுகிறாள்.
அதனால் கோபமான கோபி, வீட்டுக்கு சென்று ஈஸ்வரியிடம் இனியாவை பாக்கியாவை நம்பி அனுப்ப வேண்டாம் என சொல்கிறார். "அது தான் உங்களால் முடியாது என சொல்லிட்டீங்க இல்ல அப்புறம் யார் கூட்டிட்டு போன உங்களுக்கு என்ன?" என்கிறான் எழில். கொந்தளித்த பாக்கியா "என்னோட பொண்ணு என்னை நம்பாமல் யாரை நம்புவாள்" என கேட்கிறாள்.
ஒருவர் மாற்றி ஒருவர் பேசி வாக்குவாதம் செய்ய ஈஸ்வரி கோபியிடம் "சரி நாங்க பாக்கியாவை நம்பி கூட்டிட்டு போகல. அப்போ நீ கூட்டிட்டு போறீயா?" என்கிறார். “என்னம்மா நீங்களும் இப்படி பேசுறீங்களே? இங்க இருக்குற தாம்பரம் கூட தாண்ட மாட்டா" என சவால் விடுகிறார் கோபி.
கடுப்பான பாக்கியா "மைண்ட் யூவர் பிசினஸ்" என சொல்ல இங்கிலீஷ்ல எல்லாம் பேசுறியா என நக்கல் அடிக்கிறார். "நாங்க எப்படி போயிட்டு வருவோம் என உங்களுக்கு கவலை வேண்டாம்" என சொல்லி கிளம்ப சொல்கிறாள் பாக்கியா. அனைவரும் பாக்கியாவுக்கு சப்போர்ட் செய்ய கடுப்பான கோபி வீட்டில் இருந்து கிளம்பி விடுகிறார்.
கோபி ராதிகாவிடம் இதைப் பற்றி புலம்ப டென்ஷனாகிறாள் ராதிகா. “அப்போ நீங்க மயூ பன்க்ஷனுக்கு அவங்கள கூப்பிட போகலையா? இனியா டூர் பத்தி தான் பேச போனீங்களா?” என ராதிகா திட்டுகிறாள். கமலா அம்மா நாங்க ஒன்னும் உங்க முதல் மனைவியை கூப்பிட சொல்லலையே. உங்க அப்பா அம்மாவை தான் கூப்பிட சொல்றோம் என்கிறார். ராதிகாவின் அண்ணனும் நீங்க ராதிகாவை எந்த இடத்திலேயும் விட்டு கொடுக்க கூடாது என்கிறார். ராதிகா கோபித்து கொண்டு ரூமுக்குள் சென்று விடுகிறாள்.
கோபி அவளை போய் கோபி சமாதானம் செய்கிறார். "உங்க அம்மா என்னை எவ்வளவு அசிங்கப்படுத்துனாங்க, என்னை கழுத்தை பிடிச்சு வீட்டை விட்டு வெளியே தள்ளினாங்க. நான் தான் அவங்கள என்னோட சொந்தம் என நினைக்குறேன். அவங்க மயூ பங்ஷனுக்கு வந்தாகணும்" என சொல்லிவிட்டு வெளியே சென்று விடுகிறாள்.
கோபி வீட்டுக்கு சென்று "மயூ பெரிய மனுஷி ஆகிட்டா என சொல்லி அப்பாவையும் அம்மாவையும் வீட்டுக்கு வர சொல்கிறார். ராதிகா நீங்க வரணும் என ரொம்ப ஆசைப்படுகிறாள்" என சொல்ல ஈஸ்வரி கோபமாக நான் வரமுடியாது என கோபியை திட்டி அனுப்பிவிடுகிறார்.
பாக்கியாவும் ராமமூர்த்தியும் ஈஸ்வரியை சமாதானம் செய்கிறார்கள். ராதிகாவை பார்க்க வேண்டாம் மயூ ரொம்ப நல்ல குழந்தை, அவள் என்ன செய்வாள் என சொல்லி ஈஸ்வரியை போக சொல்லி வற்புறுத்துகிறார்கள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.