Baakiyalakshmi Aug 26: கோபிக்கு ஒரு சம்பவம் பார்சல்... மயூவால் இனியாவுக்கு வந்த புதிய சிக்கல்... பாக்கியலட்சுமியில் இன்று!
*சந்தோஷமாக கேரளா ட்ரிப் போக தயாராகும் இனியாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி* ஜெனி மீது கோபப்பட்டு தவறான பாதையில் போகும் செழியன்இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் என்ன நடக்கிறது
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொடரான பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் ஜெனி வளைகாப்பு விழா முடிந்து அனைவரும் ஜெனியை வழி அனுப்புகிறார்கள். ஜெனி அம்மாவிடம் "நான் இங்கேயே இருந்திடவா" எனக் கேட்கிறாள். அவளை ஈஸ்வரியும் பாக்கியாவும் சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்கள்.
ராமமூர்த்தி, ஈஸ்வரி மற்றும் பாக்கியா உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் இனியா வந்து “நாளைக்கு கேரளா போவதற்கு எல்லாத்தையும் நான் எடுத்து வைச்சுட்டேன். நீ வந்து பாருமா என பாக்கியாவை அழைக்கிறாள் இனியா. நான் முதல் தடவையா எனக்காக ட்ரிப் போகிறேன். நினைக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என பூரிக்கிறாள்.
செழியன் ஜெனியின் நியாபகமாவே மாடியில் நின்று கொண்டு யோசித்து கொண்டு இருக்கிறான். அந்த நேரத்தில் எழில் வந்து செழியனை கிண்டல் செய்கிறான். "நீ அவங்களுக்கு போன் பண்ணி பேசு" என எழில் சொல்கிறான். செழியன் ஜெனிக்கு போன் பண்ண எடுக்கும் போது கரெக்டா மாலினி செழியனுக்கு போன் செய்கிறாள். "இங்க நானும் தனியா இருக்கேன், நீங்களும் அங்க தனியா தான் இருக்கீங்க. இங்க வாங்க நாம இரண்டு பேரும் சேர்ந்து ஜாலியா பேசிகிட்டு இருக்கலாம். சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிடலாம்" என மாலினி சொல்ல, செழியன் சற்று குழம்புகிறான்.
கிளப்புவதற்கு முன் ஜெனிக்கு ஒரு முறை போன் செய்து பார்க்கலாம் என போன் செய்கிறான். ஆனால் அவள் லைன் பிஸியாகவே இருக்கிறது. ஜெனி அமிர்தாவுக்கு போன் செய்து பாக்கியா, ஈஸ்வரியுடன் பேசிக்கொண்டு இருக்கிறாள். ஜெனி பாக்கியாவுடன் பேசிவிட்டு செழியனுக்கு போன் செய்யலாம் என எடுக்கும் போது ஜெனியின் அம்மா வந்து போன் வைத்துவிட்டு வா என அழைத்து செல்கிறார்.
அந்த நேரம் பார்த்து செழியன் மீண்டும் ஜெனிக்கு போன் பண்ண ஜெனி எடுக்கவில்லை. அதனால் கடுப்பான செழியன், ஜெனிக்கு என் மேல கொஞ்ச கூட அக்கறை இல்லை என நினைத்து மாலினியை பார்ப்பதற்காக கிளம்பிவிடுகிறான்.
ராதிகாவும் கோபியும் வளைகாப்பு நல்லபடியாக முடிந்ததை நினைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ராதிகாவின் அம்மா வந்து மயூ பெரியவளாகிவிட்டாள் என்பதை சொல்லவும், ராதிகாவும் கோபியும் சந்தோஷப்படுகிறார்கள். நாளைக்கே பங்க்ஷன் வைச்சுக்கலாம் என ராதிகாவும் அவளுடைய அம்மாவும் பேசிக்கொள்கிறார்கள். ராதிகாவின் அம்மா மகனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அவரும் மலேசியா ட்ரிப்பை கேன்சல் செய்து விட்டு வருவதாக சொல்லிவிடுகிறார்.
ராதிகா கோபியிடம் "நாளைக்கு நீங்க எங்கேயும் போகக் கூடாது" என சொல்கிறாள். கோபி ராதிகாவிடம் நாளைக்கு "நான் இனியா கூட கேரளா போகிறேன்" என சொன்னதும் கோபமான ராதிகா "நீங்க இல்லாம பங்க்ஷன் எப்படி பண்ண முடியும். ட்ரிப் அப்புறமா கூட போகலாம்" என்கிறாள் ராதிகா. இனியாவிற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் கோபி. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.