Anna Serial: சண்முகத்துக்கு விஷ ஊசி.. மரண பயத்தை காட்டிய பரணி.. அண்ணா சீரியல் இன்று!
சண்முகம் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென அவனுக்கு பரணி ஊசி போடுவது போல தோன்ற அலறி எழுந்து கொள்ள பிறகு அது கனவு என தெரிய வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணிக்கு தாயத்து ரகசியம் தெரிய வந்ததைத் தொடர்ந்து, இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது வீட்டுக்கு வந்த பரணி எல்லோரிடமும் சண்டை போட்டு சண்முகத்திடம் “இன்னைக்கு நைட்டு உனக்கு விஷ ஊசி போட்டு கொல்ல போறேன்” என்று சொல்ல, அவன் பயத்துடன் படுக்க செல்கிறான்.
சண்முகம் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென அவனுக்கு பரணி ஊசி போடுவது போல தோன்ற அலறி எழுந்து கொள்ள பிறகு அது கனவு என தெரிய வருகிறது. ஊசி போட்டு கொன்றாலும் கொன்னுடுவார் என்ற பயத்தோடு சண்முகம் தூங்காமல் இருக்க, விடியற்காலையில் அசந்து தூங்குகிறான்.
தங்கைகள் அவனை எழுப்ப சண்முகம் நன்றாகத் தூங்கிய பிறகு வைகுண்டத்துடன் செல்ல அவர் முகத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்புகிறார். அதன் பிறகு பரணி கோலம் போட்டு “இன்னும் 40 நாள்களில் இங்கிருந்து ரிலீஸ் ஆகி விடுவேன்” என்று எழுதி இருக்க, அதைப் பார்த்ததும் வைகுண்டத்துடன் சண்டை போடுகிறான்.
வைகுண்டம் “தாயத்தால் தானே இவ்வளவு பிரச்சனை? சரி இனிமே பிரச்சனையே வரக்கூடாதுன்னு ஒரு தாயத்து வாங்கிட்டு வரேன்” என்று சொல்ல சண்முகம் கோவப்பட, வைகுண்டம் அங்கிருந்து ஓடி விடுகிறார்.
அடுத்ததாக சௌந்தரபாண்டி ஊர் பெரியவர்களை சந்தித்து சண்முகம் தர்மகத்தா தேர்தலில் நிற்கப் போறது இல்லை என்று சொல்ல, அங்கு வரும் வைகுண்டம், “யார் அப்படி சொன்னது? சண்முகம் இது தேர்தல்ல நிப்பான்” என்று சொல்ல அதை அவனே வந்து சொல்லட்டும் என்று ஷாக் கொடுக்கிறார். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் நிறைவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

