Anna Serial: சௌந்தரபாண்டியை வைத்து கேம் விளையாடும் பாக்கியம் - அண்ணா சீரியல் அப்டேட்!
வைகுண்டத்தை நேரில் சந்தித்து தாலி பிரித்துப் போட போவதாக சொல்லி எல்லாரையும் அழைத்து வர சொல்கிறாள் பாக்கியா
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி பாண்டியம்மாவை பாத்ரூம் கழுவ வைக்க, அதைப் பார்த்து சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சௌந்தரபாண்டி “அக்கா நீ எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்யுற?” என்று கேட்க, “இதுல என்னடா இருக்கு?நான் யூஸ் பண்ற பாத்ரூம் தானே?” என்று சொல்கிறார். இசக்கியும் “இந்த ரூம்ல தான இருக்கா, அவளைக் கழுவ சொல்ல வேண்டியது தானே?” என்று கேட்க, ஒரு பிரச்னையும் இல்ல என்று சொல்ல, முத்துப்பாண்டி அவளை கழுவ சொல்ல வேண்டியது தானே என்று கேட்க, சௌந்தரபாண்டி “என் அக்கா யார் பேச்சையும் கேட்க மாட்டா, நீ வா” என்று அழைத்து வந்து விடுகிறார்.
இதனைப் பார்த்து சந்தோஷமடையும் பாக்கியா, “இசக்கி முத்துபாண்டியோட கொட்டத்தை அடக்குவா, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என சந்தோசப்படுகிறாள். பிறகு இசக்கிக்கு தாலி பிரித்து போட முடிவெடுக்கிறாள். வைகுண்டத்தை நேரில் சந்தித்து தாலி பிரித்துப் போட போவதாக சொல்லி எல்லாரையும் அழைத்து வர சொல்கிறாள். வைகுண்டம் “அது எப்படி முடியும்? ஷண்முகம் எப்படி வருவான்?” என்று கேட்க,“நீ எப்படியாவது கூட்டிட்டு வா அண்ணே” என்று சொன்னதும் வைகுண்டமும் சரி என்று வாக்கு கொடுக்கிறார்.
வீட்டுக்கு வந்து “நாளைக்கு கோயிலில் வைத்து மாலை போடப் போறேன், வீட்ல எல்லாரும் வரணும்” என்று சொல்லி எல்லாரையும் சம்மதிக்கவும் வைக்க, மறுபக்கம் பாக்கியம் சௌந்தரபாண்டியிடம் “முத்துப்பாண்டி இசக்கி கழுத்தில் மறுதாலி கட்டணும், அது வரைக்கும் உங்க உயிருக்கு கண்டம் இருக்குனு ஜோசியர் சொல்லிட்டாரு” என்று அழுவது போல ட்ராமா போட, உயிருக்கு பயந்து சௌந்தரபாண்டி இசக்கிக்கு தாலி பிரித்து போட சம்மதம் தெரிவிக்கிறார்.
இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Guna Cave: குணா குகையை கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச கமல்.. ஒரே படத்தில் தட்டித்தூக்கிய மஞ்சுமெல் பாய்ஸ்!
Rashmika: “வி.டி போன்ற கணவர் வேண்டும்” - விஜய் தேவரகொண்டாவுடனான காதலை உறுதி செய்த ராஷ்மிகா?