Raja Rani 2 Serial: அழகிய ராட்சசி அர்ச்சனா விலகல்... ராஜா ராணி 2க்கு புதிய வில்லி யார்?
Raja Rani 2 Serial: ராஜா ராணி சீரியலின் 2 ம் பாகத்தின் வில்லியாக உள்ள ஆர்.ஜே. அர்ச்சனா, அழகான ராட்சசியாக கலக்கி வந்தார்.
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிரப்பாகும் தொடர்களில் ஒன்றான ராஜா ராணி 2(Raja Rani 2), அதிக பார்வையாளர்களை கொண்டதாகவும். ஏற்கனவே ராஜா ராணி தொடர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக தான் இந்த தொடர் தொடங்கப்பட்டது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் நல்ல வெற்றி பெற்றதுடன், ரசிகர்களின் ஆதரவும் பெற்றது.
பொதுவாக சீரியல்களில் ஹீரோ, ஹீரோயினை விட, வில்லி அல்லது வில்லன்களுக்கு தான் அதிக மவுசி மற்றும் ரசிகர் கூட்டம். அந்த வகையில் ராஜா ராணி சீரியலின் 2 ம் பாகத்தின் வில்லியாக உள்ள ஆர்.ஜே. அர்ச்சனா, அழகான ராட்சசியாக கலக்கி வந்தார். அந்த சீரியலில் ஐக்கானாகவும் அவர் தொடர்ந்தார்.
View this post on Instagram
அர்ச்சனாவின் கதாபாத்திரத்தை பாராட்டி அவருக்கு விஜய் டெலி அவார்ட்ஸ் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி கலாட்டா நிறுவனத்தின் விருதும் வழங்கப்பட்டது. அந்த அளவிற்கு ராஜா ராணி 2 சீரியலின் தூணாக இருந்த அர்ச்சனா(Archana), அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த மார்ச் மாதமே இந்த தகவல் வெளியான நிலையில் அப்போது அது தொடர்பான பெரிய தகவல்கள் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அர்ச்சனா வெளியேற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வேறு வாய்ப்புகள் காரணமாகவே அர்ச்சனா இந்த தொடரில் இருந்து விலக உள்ளார் என்கிற தகவலும், பெரிய வாய்ப்புகள் கதவை தட்டியதே அர்ச்சனாவின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
View this post on Instagram
எது எப்படி இருந்தாலும், அர்ச்சனாவின் இந்த விலகல், அவருக்காக ராஜா ராணி 2 சீரியலை பார்த்துக் கொண்டிருக்கும் அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.