Watch Video: சமந்தாவை அலேக்காக தூக்கி ஆட்டம் போட்ட அக்ஷய்! வைரலாகும் டான்ஸ் வீடியோ!
காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அடுத்ததாக நடிகர் அக்ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றுள்ளனர். இதில் பல கேள்விகளுக்கு இருவரும் வெளிப்படையான பதிலளித்துள்ளனர்.

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றுள்ள ப்ரோமோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கரண் ஜோஹர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தங்கள் மனம் திறந்த பதில்களை அளிப்பதால் இதனை ரசிகர்கள் பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இதன் 7வது சீசன் தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு முன்பாக கடந்த 6 சீசன்களாக காபி வித் கரண் நிகழ்ச்சி என்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது. பாப் கலாச்சார வரலாற்றில் எங்களுடைய தாக்கம் இருப்பதாக நான் நினைக்கிறேன். காஃபி வித் கரண் இனி ஒரு போதும் திரும்பி வராது என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 7வது சீசனில் ஆலியா பட் - ரன்பீர், சாரா அலி கான், ஜான்வி கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Can't wait to see them😍
— AKRS (@PROUD_TB_INDIAN) July 19, 2022
Old Akshay kumar is back!!#AkshayKumar #SamanthaRuthPrabhu
@akshaykumar @Samanthaprabhu2 @karanjohar pic.twitter.com/z6qC7w1rEN
இதில் சாரா அலிகான், ஜான்வி கபூரிடம் பல விஷயங்களை போட்டு வாங்கினார். குறிப்பாக ஜான்வியிடம் முன்னாள் காதலுடன் மீண்டும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பீர்களா என கேட்ட கேள்விக்கு, அவர் பின்னோக்கி செல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். இதேபோல சாரா அலிகான் தான் விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இப்படி பல சர்ச்சையான சம்பவங்கள் தான் இந்நிகழ்ச்சியை ரசிகர்களால் கொண்டாட வைக்கிறது.
இந்நிலையில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அடுத்ததாக நடிகர் அக்ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றுள்ளனர். இதில் பல கேள்விகளுக்கு இருவரும் வெளிப்படையான பதிலளித்துள்ள நிலையில், ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் மாஸ் டான்ஸ் ஒன்றை ஆடியுள்ளனர். இதன் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிகழ்ச்சி ஜூலை 3 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















