பொள்ளாச்சி மாதிரி ஆக்ராவில் நடக்காது.! உறுதியாய் இருக்கும் டான் படக்குழு!
சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தின் சில காட்சிகளுக்காக படக்குழுவினர் ஆக்ரா சென்றுள்ளனர்.
தமிழில் டிவி ஷோக்களின் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன் நடிப்புத்திறமையின் மூலம் வெள்ளித்திரையிலும் கால்பதித்திருக்கிறார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரஜினி முருகன், சீமராஜா, மனம் கொத்தி பறவை, வேலைக்காரன், காக்கி சட்டை போன்ற பல்வேறு படங்களில் நக்கலான பேச்சு மற்றும் எதார்த்த நடிப்பின் காரணமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார் சிவகார்த்திக்கேயன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளித்திரையில் ஹூரோ படத்தில் தென்பட்ட சிவகார்த்திக்கேயன் இதுவரை எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் பெரிய திரைக்கு வராமல் இருந்த சிவகார்த்திக்கேயன் தற்போது அடுத்தத்தடுத்த படங்களுக்கு கமிட் ஆகி நடித்துவருகிறார்.
தற்போது இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் சிவகார்த்திக்கேயன், பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் டாக்டர் படம் மற்றும் அயலான் திரைப்படத்தின் சூட்டிங் முடிவுற்ற நிலையில் ரீலிஸ்க்காக காத்திருக்கிறது. இதோடு அக்டோபர் 13 ஆம் தேதி சிவகார்த்திக்கேயனின் டாக்டர் படம் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திக்கேயன் டான் பட சூட்டிங் பிஸியாக இருக்கிறார். இயக்குனர் சிபி சக்கவர்த்தி இயக்கி வரும் இப்படத்தில் நடிகர் சூரி, சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி ஷிவாங்கி உள்ளிட்டோர் பலர் நடித்துவருகின்றனர்.
இந்நிலையில் தான் ஒரு பாடல் காட்சிக்காக டான் படக்குழுவினர் ஆக்ரா விரைந்துள்ளனர். ஒரு வார காலம் அங்கு தங்கி சூட்டிங் எடுக்கத்திட்டமிட்டுள்ளனர். இதுக்குறித்து படக்குழுவினர் தெரிவிக்கையில், டான் படத்தின் அனைத்துக்காட்சிகளும் நல்ல முடிவுற்ற நிலையில் படம் நன்றாக வந்துக்கொண்டிருக்கிறது என கூறியுள்ளனர். மேலும் காதல் கதையை மையமாகக்கொண்டு இக்கதைக்களம் அமைவதால் பாடல் ஒன்றிற்காக ஆக்ரா சென்றுள்ளதாகவும், ஒரு வாரத்திற்கு அங்கு சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது வடகிழக்குப்பருவழை காலமாக இருந்தாலும் அதனால் எந்தப்பாதிப்பும் சூட்டிங்கின் போது ஏற்படாது எனவும், நிச்சயம் பாடல் காட்சிகளை எடுத்து முடித்துவிடுவதாகவும் டான் படக்குழுவினர் தெரிவித்தனர்.
ஏற்கனவே இப்படத்தின் சூட்டிங் பொள்ளாட்சி மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. படப்பிடிப்பு என்றாலே எப்போதும் மக்கள் கூடுவது வழக்கம். அதேப்போன்று தான் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியைக்காண்பதற்காக மக்கள் கூடினர். அதுவும் கொரோனா காலக்கட்டம் என்பதால் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அபராதம் விதித்தனர். இதனால் சூட்டிங் ஸ்பார்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனவே ஆக்ரா சென்றுள்ள நிலையில் இதேபோன்ற நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம் எனவும் டான் படக்குழுவினரை் தெரிவித்துள்ளனர்.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹூரோவாக நடிக்கும் நகைச்சுவைக் கலந்த காதல் திரைப்படத்தை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது லைக்கா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.