Pizza 3 The Mummy | ப்பா..! ஹாலிவுட் தரம்.. என்ன ஒரு டீஸர்? பீட்சா 3 பத்தி இதெல்லாம் தெரியுமா பாஸு..
பா.ரஞ்சித் உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் டீஸரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி , ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் பீட்சா. இந்த படம்தான் விஜய் சேதுபதிக்கும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கும் மாபெரும் கெரியரை சினிமாவில் உருவாக்கி கொடுத்தது எனலாம். அதன் பிறகு இந்த படத்தின் பெயரை மட்டும் எடுத்துக்கொண்ட்டு பீட்சா II: வில்லா என்ற இதன் அடுத்த திகில் பாகத்தை உருவாக்கினர். இதனை தீபன் சக்கரவர்த்தி இயக்கியிருந்தார்.நாயகனாக அசோக் செல்வன், நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்திருந்தனர். முதல் பாகம் அளவிற்கான வரவேற்ப்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என்றாலும் , படம் திலிக் அனுபவத்தை கொடுக்கவும் தவறவில்லை. நஷடமில்லாத வசூலையும் பெற்றுத்தந்தது.
ஹாரர் த்ரில்லர் வகையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது பாகம் உருவாகி வருகிறது. பீட்சா3 தி மம்மி என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் முதல் போஸ்டரை, முதல் பாகத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருந்தார்.
On this auspicious day Glad to share the spine chilling teaser of #Pizza3TheMummy https://t.co/rcKT2Yge5U
— C V Kumar (@icvkumar) October 16, 2021
A C V Kumar Production
பீட்சா 3தி மம்மி படத்தை மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். முந்தைய பாகங்களை தயாரித்த சி.வி.குமார் இந்த மூன்றாவது பாகத்தையும் தயாரித்து வருகிறார்.அஸ்வின், குருவ் நாராயணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டீஸர் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் காட்சிகள் டீஸரில் இடம்பெற்றுள்ளன. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பா.ரஞ்சித் உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் டீஸரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
Interesting teaser 💥💥💥my best wishes to the entire team @icvkumar #mohangovind 🎉🎉🎉🌸🌸🌸 https://t.co/n1epot3I9Q
— pa.ranjith (@beemji) October 16, 2021
முந்தைய இரண்டு பாகங்களை விட , இதில் திகிலுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம். முன்னதாக படத்தில் நடித்துள்ள குருவ் நாராயணன் பேசும்பொழுது படத்தின் கதைக்களம் மிகவும் வலுவானது என குறிப்பிட்டிருந்தார்.மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் பீட்சா3 தி மம்மி திரைப்படம் , நாயகன் அஸ்வினுக்கு நடிப்பதற்கான ஸ்கோப்பை அதிகம் ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அஸ்வின் முன்னதாக ஸீரோ என்னும் த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்ததன் மூலம் பலராலும் அறியப்பட்டார்.நீச்சயம் பீட்சா3 தி மம்மி படத்தில் அஸ்வின் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார் என்பது டீஸர் காட்சிகள் மூலம் தெளிவாகிறது.