Sai Pallavi in Bollywood: பாலிவுட்டில் களமிறங்கும் சாய் பல்லவி
சாய் பல்லவி ஒப்புக்கொண்டால் அவர் நடிக்க இருக்கும் முதல் ஹிந்தி படமாக இது அமையும் . தமிழ், மலையாளம் , தெலுங்கு அடுத்து ஹிந்தியிலும் கால் பதித்து விடுவார்.
மலையாளம் பிரேமம் படத்தின் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர் சாய் பல்லவி . அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என்று பல படங்களை தொடர்ச்சியாக நடித்து வந்தார் சாய் பல்லவி .
தமிழில் தியா, மாரி 2 போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சாய் பல்லவியின் நடிப்பை தாண்டி அவரின் நடனத்திற்கு அதிக ரசிகர்கள் உண்டு . தனது நடனத்தின் பயணத்தை உங்களில் யாரு பிரபுதேவாவில் ஆரம்பித்தார் .அவர் நடனத்தில் அனைவரின் மனதை கவர்ந்தார் . சாய் பல்லவியின் முதல் வைரல் ஹிட் பாடலாக அமைந்த பாடல் "rowdy baby " 100 மில்லியன் வியூஸ்களைப் பெற்றது. சாய் பல்லவியின் நடனம் அனைத்து குழைந்தைகளால் ரசிக்கப்பட்டது. இதையடுத்து தற்பொழுது வெளியான "சாரங்க தரியா " பாடல் வெளியாகி சில நாட்களிலே 50 மில்லியன் வியூஸ்களை பெற்று உள்ளது. அதில் சாய்பல்லவியின் நடனம் இன்னும் மெருகேறியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘சத்ரபதி’ என்ற படத்தை தற்போது இந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளனர். இதில் நாயகனாக தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்க, வி.வி.விநாயக் இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகை சாய்பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது . சாய் பல்லவி ஒப்புக்கொண்டால் அவர் நடிக்க இருக்கும் முதல் ஹிந்தி படமாக இது அமையும் . தமிழ், மலையாளம் , தெலுங்கு அடுத்து ஹிந்தியிலும் கால் பதித்து விடுவார்.
"நான் எனது நடிப்பில் எனது திறமையை காண்பிக்க விரும்புகிறேன் .அது மட்டும் தான் என்னுடைய தனித்துவத்தை காண்பிக்கும் நான் ஒரு நல்ல நடிகை என்று விரைவில் நிருபிப்பேன் " என்று ஏற்கனவே கூறி இருந்தார் .இந்த பாலிவுட் பயணம் அவரின் கனவுகளை நிறைவேற்றலாம். படத்தை பற்றிய அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.