நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விசா: முதன்முறையாக தமிழ் நடிகைக்கு பெருமை சேர்த்த அமீரகம்!
முதல் முறையாக தமிழ் நடிகை ஒருவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
நடிகை திரிஷாவுக்கு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கெளரவித்துள்ளது. முதல் முறையாக தமிழ் நடிகை ஒருவருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ‘கோல்டன் விசா’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம் என அழைக்கப்படும் துபாய் அரசு. அந்த வகையில் இந்தியாவில் விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள், கலைத்துறையை சேர்ந்த பலருக்கு கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்ஸ் என அழைக்கப்படும் மம்முட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசாக்களை வழங்கி கவுரவப்படுத்தியிருந்தது துபாய் அரசு. இதேபோல், நடிகர் துல்கர் சல்மானுக்கு இந்த விசா வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகை திரிஷாவுக்கு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கெளரவித்துள்ளது. இதனை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில், “தங்க விசாவைப் பெற்ற முதல் தமிழ் நடிகை என்பதில் மகிழ்ச்சியும் பாக்கியமும் உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Happy and privileged to be the first Tamil actor to have received the golden visa😀
— Trish (@trishtrashers) November 3, 2021
Thank you🙏🏻 @emiratesfirst
@jamadusman @rjrijin
@efirstglobal @alsaadgdrfa @gdrfa @dubai #uaegovernment #dubaiculture pic.twitter.com/MgCnwtZj5m
குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் திறமையானவர்களையும் ஈர்க்கும் பொருட்டு ஐக்கிய அமீரகத்தால் கொண்டுவரப்பட்டதுதான் கோல்டன் விசா. 10 வருடம் ஐக்கிய அரபு நாடுகளில் தங்கி பணியாற்றும் ஒரு சிறப்புமிக்க விசாதான் இந்தக் கோல்டன் விசா. இதனை வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டு குடிமக்கள் போலவே கருதப்படுவார்கள் . பொதுவாக விசா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆனால் கோல்டன் விசா 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தால் மட்டுமே போதுமானது ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019-ஆம் ஆண்டு கோல்டன் விசாவை அறிமுகம் செய்தது.ஐக்கிய அரபு அமீரகம் இந்த கோல்டன் விசாவை அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் சிறப்பான நடிகர்கள், நடிகைகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைத்துறை சேர்ந்தவர்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் அமீரகத்தில் தங்கி பணியாற்றும் மருத்துவர்களும் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்