சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கா?.. நச் என பதில் அளித்த பாலா பட நடிகை
சினிமாவில் பெண்களுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த பிரச்னைக்கு பாலா பட நடிகை அளித்த பதிலை பலரும் வரவேற்றுள்ளனர்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இவானா. இப்படத்தை தொடர்ந்து அவர் பிரதீப் ரங்கநாதனுடன் லவ் டுடே படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மலையாள நடிகையான இவர், தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகள் குறித்தும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்தும் இவானா பேசியிருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அறிமுக நடிகைகள் சிலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாலியல் பிரச்னைகள்
சினிமாத்துறையில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற சொல்லை அதிகம் கேள்விப்பட்டிருப்போம். இதனால், பாதிக்கப்பட்ட பல நடிகைகள் சினிமாவை விட்டு விலகி சென்றதாகவும் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பெயரும் இதில் அடிபடும். சமீபகாலமாக பெண்கள் வெளிப்படையாக தங்களுக்கு நடக்கும் பிரச்னைகளை வெளிப்படையாக சமூகவலைதளங்களில் வெளியிட்டு பல இயக்குநர்களின் முக்ததிரையை கிழித்து வருகின்றனர். பாலியல் ரீதியான பிரச்னைகள் சினிமாத்துறை மட்டும் அல்ல எல்லா இடங்களிலும் இருப்பதாகவே தெரிவிக்கின்றனர். ஆனால், அதிகம் பாதிக்கப்படுவது சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் தான் என சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் தெரிவித்திருந்தார்.
மலையாள சினிமா
கோலிவுட்டை போன்று மல்லுவுட்டிலும் பாலியல் சீண்டல் விவகாரம் பூகம்பத்தை கிளப்பியது. இதில், பல நடிகர்கள் முதல் சீரியல் நடிகர்கள் வரை கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பாரதிராஜா பட நடிகை அஸ்வினி நம்பியாரும் மலையாள திரையுலகில் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன் என பகீர் குற்றச்சாட்டை வைத்தார். இதற்கென்று ஹேமா கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக முன்னணி நடிகைகள் பலரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில், நடிகை இவானா பாலியல் சீண்டல் குறித்து பதில் அளித்திருப்பது ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது.
பெற்றோர் பாதுகாப்பு தருகிறார்கள்
தெலுங்கில் சிங்கிள் என்ற படத்தில் இவானா நடித்துள்ளார். இப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷனுக்காக அளித்த பேட்டியில், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையால் நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கீங்களா? என ஆங்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு, சினிமாத்துறையில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை இருப்பதாக பலரும் கூறியதை கேட்டிருக்கிறேன். ஆனால், நான் இதுவரை இதுமாதிரியான பிரச்னைகளில் சிக்கியது இல்லை. நான் படப்பிடிப்பு தளத்திற்கு எனது அம்மாவை அழைத்து செல்வேன். உறவினரும் வருவார்கள். நான் பாதுகாப்போடு செல்வதால் யாரும் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்டதில்லை என பதில் அளித்தார். இதுதொடர்பான வீடியோவை பார்த்த வளரும் நடிகைகள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.





















