Survivor Tamil: வனமே வனத்திற்கு வந்தது போல்... சர்வைவரில் வந்திறங்கிய வனேசா குரூஸ் யார்?
வேலர்ட் மிஸ் யூனிவர்சிட்சி மலேசியா 2018, மிஸ் பிட்னஸ் ஆசியார் இன்டர்நேஷனல், மிஸ் ஏசியா மலேசியா 2017 என பல பட்டங்களை பெற்றவர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சி, ஒவ்வொரு நாளும் ஒரு விதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, பார்வையாளர்களை பெற்று வருகிறது. அந்த வரிசையில் நேற்று நிகழ்ச்சியின் திடீர் திருப்பமாக நடிகர் இனிகோ பிரபாகர் மற்றும் வனேஷா குரூஸ் ஆகியோர் திடீரென போட்டியாளராக களமிறங்கினர். இரண்டு வாரங்களை நிகழ்ச்சி கடந்த நிலையில், திடீரென புதிய போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், அவர்கள் எந்த தீவிற்கு செல்வார்கள்... கார்டர்கள் அணிக்கு செல்வது யார்... வேடர்கள் அணிக்கு செல்வது யார்... என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே... ப்ரஷ் போட்டியாளராக களமிறங்கியிருக்கும் வனேஷா குரூஸ் மீது பலரின் பார்வை விழுந்துள்ளது. கரடுமுரடான தீவில் பளிச்சென வந்திறங்கிய வனேஷாவை, யார் இந்த வனேஷா என பலரும் தேடத்தொடங்கியுள்ளனர். இதோ உங்களுக்காக வனேஷா பற்றி தகவல்கள்...
View this post on Instagram
1996ல் மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர் வனேஷா குரூஸ். நெல்லையை பூர்வீகமாக கொண்ட தமிழரான இவர், மூன்று தலைமுறையாக மலேசியாவில் வசித்து வருகிறார். மலேசியாவின் சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வரும் வேனிஷா, துவக்கத்தில் ஒரு மாடலாக மலேசியாவில் அறிமுகமானார். மாடலிங் துறையில் பல பரிசுகளை பெற்றுள்ள அவர், அங்குள்ள டிவி தொடர்களில் அதிகம் நடித்துள்ளார். மலேசியாவில் நடந்த கபாலி படப்பிடிப்பில் சிறிய கேரக்டரில் நடித்துள்ள வனேஷா, தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இந்திய டிவி நிகழ்ச்சிகளை குறி வைத்தார். அதன் அடிப்படையில் ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்தார்.
View this post on Instagram
வேலர்ட் மிஸ் யூனிவர்சிட்சி மலேசியா 2018, மிஸ் பிட்னஸ் ஆசியார் இன்டர்நேஷனல், மிஸ் ஏசியா மலேசியா 2017 என பல பட்டங்களை பெற்ற வனேஷா, அடுத்ததாக பிரபல சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று, சாம்பியனாக திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு ரியாலிட்டி ேஷாக்களில் சமீபமாக தமிழ் பேசும் நாடுகளாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்பது வாடிக்கையாகி வருகிறது. இதன் மூலம் தங்கள் நிகழ்ச்சியை சர்வதேச தரத்திற்கு எடுத்துச் செல்லலாம் என தொலைக்காட்சி நிறுவனங்கள் நினைக்கின்றன. அதன் நீட்சியே தற்போது சர்வைவர் நிகழ்ச்சியில் வனேஷாவின் வருகை. இளைமையும், துள்ளலுமாய் வந்து இறங்கியிருக்கும் வனேஷாவின் வருகை, சர்வைவர் நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யமாக்கும் என்றே தெரிகிறது.