Survivor Tamil: காடர்கள் லீடர் காயத்ரி... வேடர்கள் லீடர் லெட்சுமி... ‛பைட்’ பார்வதி பாய்ச்சலில் சிருஷ்டி மூட் அவுட்!
survivor tamil: என்னை அனைவரும் மட்டம் தட்டுகிறார்கள் என பார்வதி பகிரங்க குற்றச்சாட்டு வைத்தார். என்னை ட்ரிக்கர் செய்தீர்கள் என சிருஷ்டி மீது குற்றம் சாட்டினார்.
தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் பலவும் இன்று ரசிகர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு வித்தியாசமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஔிபரப்பி வருகின்றனர். நாடகங்கள், திரைப்படங்கள், நகைச்சுவைகள் என்று இருந்ததை மாற்றி ரியாலிட்டி ஷோக்கள், பாட்டு மற்றும் நடனப் போட்டிகள், கேம் ஷோக்கள் என்று ஒளிபரப்பி வருகின்றனர்.
இந்த வரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை தொடங்கியுள்ளனர். டிஸ்கவரி தொலைக்காட்சியில் வரும் ‛நேக்ட் அண்ட் அப்பையர்ஸ்’ நிகழ்ச்சியை அப்படியே தமிழுக்கு ஏற்றார் போல் காப்பி அடித்தாலும், எந்த சமரசமும் இல்லாமல் அதே தரத்தில் நிகழ்ச்சியை எடுத்துள்ளனர். நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆக்ஷன் கிங் அர்ஜூன் உள்ளார். தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காடர், வேடர் என்ற இரு அணிகளாக பிரிக்கப்பட்டு தற்போது தனித்தனி தீவுகளில் இரு பிரிவுகளாக போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது நாள் எபிசோட் இன்று நடந்தது.
சர்வைவர் தமிழின் 3வது எபிசோட்:
ட்ரைப் லீடர் யார் என்கிற தேர்வு குறித்து அர்ஜூன் முதலில் போட்டியாளர்களிடம் விளக்கினார். ஒரு குழுவிற்கு 4 பேர் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
காடர்கள்:
விஜயலட்சுமி, காயத்ரி, லேடி கேஷ், இந்திரஜா ஆகிய நான்கு பேர் போட்டிக்கான தேர்வானார்கள். அவர்களில் லேடிகேஷ் அதிகபட்ச வாக்குகள் பெற்றார். இரண்டாவதாக காயத்ரி அதிக வாக்கு பெற்றார். இதைத் தொடர்ந்து அந்த இருவரும் காடர்கள் அணியின் போட்டியாளராக தேர்வானார்கள். அதில் அதிக பாட்டில்களை காப்பாற்றி காயத்ரி வெற்றி பெற்றார். ஓட்டுகள் குறைவாக வாங்கினாலும், விளையாட்டில் வெற்றி பெற்று அவர் ட்ரைப் லீடர் ஆனார்.
வேடர்கள்:
லட்சுமி ப்ரியா, ஐஸ்வர்யா, அம்ஜத் கான், நரேன் ஆகிய 4 பேர் போட்டிக்கு வந்தனர். அவர்களில் லட்சுமி ப்ரியா அதிக ஓட்டுகள் பெற்றார். இரண்டாவதாக அதிக ஓட்டு பெற்ற வகையில் ஐஸ்வர்யா தேர்வாகினார். 9 பாட்டில்களை காப்பாற்றி லட்சுமி ப்ரியா வெற்றி பெற்றார். ஐஸ்வர்யா 8 பாட்டில்களை பாதுகாத்து தோல்வி அடைந்தார். இதன் மூலம் வேடர்கள் அணிக்கு லட்சுமி ப்ரியா ட்ரைப்ஸ் லீடர் ஆனார்.
இதைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் உத்தரவில் இனி பிற டீம் போட்டியாளர்கள் செயல்பட வேண்டும்.
வேடர் அணியில் கொதித்த பார்வதி... வெடித்த சிருஷ்டி!
இந்த போட்டியின் போது கருத்து தெரிவித்த வி.ஜெ., பார்வதி, தனக்கு எதிராக சிலர் செயல்படுவதாக மறைமுக கருத்து தெரிவித்தார். பின்னர் தீவு திரும்பியதும் குழுவினர் அனைவரும் அமர்ந்து பேசினர். முன்னதாகவே அது குறித்து தனித்தனியாக ஆலோசித்தனர். நந்தா பேசும் போது, நாம் அனைவருமே வந்த ஒரு நாள் தான் ஆகிறது. அதற்குள் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை சரிசெய்ய வேண்டும் என்றார். அனைவருமே பார்வதி மீது குறை இருப்பதாக கருதினர். அப்படி தான் அவர்களின் கருத்தும் இருந்தது. என்னை அனைவரும் மட்டம் தட்டுகிறார்கள் என பார்வதி பகிரங்க குற்றச்சாட்டு வைத்தார். என்னை ட்ரிக்கர் செய்தீர்கள் என சிருஷ்டி மீது குற்றம்சாட்டினார். என்னை வெறுப்பேற்ற முயற்சித்தீர்கள். என்னை நோக்கி சிரித்தீர்கள். என் முன்னாடி பேசுங்கள். பின்னால் பேசாதீங்க என சிருஷ்டி மீது கடுமையாக குற்றம்சாட்டினார்.
ஆனால் சிருஷ்டி மறுத்தார். ஆனாலும் பார்வதி அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் சக போட்டியாளர்கள் அவர்களை சமரசம் செய்து வைத்தனர். முதல்நாளே ஒட்டுமொத்த அணி மீது பார்வதி பாய்ச்சல் ஆனதும், சிருஷ்டியை நேரடியாக வம்பிழுத்ததும் போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளுக்கு...