Vaadi Vaasal : வாடிவாசலுக்கு ரெடியாகும் கோலிவுட் காளை.. டிசம்பரில் துவங்கவிருக்கும் படப்பிடிப்பு
வாடி வாசல் படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதத்திலிருந்து துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் வாடி வாசல் படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதத்திலிருந்து துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
தற்போது, இயக்குநர் பாலாவின் வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா பயங்கர பிசியாக இருந்து வருகிறார். சிறுத்தை சிவாவின் படத்தில் நடிக்கவும் சூர்யா ஒப்பந்தம் செய்தார். இதற்கு இடையே, வெற்றி மாறனின் வாடிவாசல் படத்திற்காக ஜல்லிகட்டு மாடுகளுடன் கடின பயிற்சியில் ஈடுப்பட்டுவருகிறார்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் சூர்யாவும் முதன் முறையாக இணைந்துள்ளனர். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்படவுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
#VaadiVaasal Update🔥🔥@Suriya_offl @gvprakashhttps://t.co/N9Jwrl72PG pic.twitter.com/C1OxmwV0M2
— 🦂 (@RazakSuriya) March 5, 2022
இப்படத்துக்கான டெஸ்ட் ஷூட் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்கெனவே நடைபெற்றது. சூர்யாவின் பிறந்தநாள் அன்று வாடிவாசல் படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை என வெற்றிமாறனுடன் கூட்டணி சேர்ந்த ஜீவி.பிரகாஷ் இப்படத்தில் இசையமைக்கவுள்ளார். முன்னதாக வாடிவாசலில் பாடல்கள் எப்படி அமையும் என்று ஜீ.வி.பிரிகாஷ் பேசினார். எப்போதும் வெற்றி கூட்டணியாக வளம் வரும் இருவரின் காம்போ ஃபார்முலா இப்படத்தில் ஹிட் அடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
திரையுலகில் அனைவரும் அடுத்த அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இயக்குநர் வெற்றி மாறனும் தற்போது விடுதலை படத்தை இயக்கவுள்ளார். முதலில் விடுதலை படம் வெளியாவதால், விடுதலை படத்திற்கான ஷூட்டிங்கை முடித்த பின்புதான் வாடிவாசல் படப்பிடிப்பு துவங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க : இயக்குனர் ஷங்கர் எடுத்த திடீர் முடிவு... 'இந்தியன் 2' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாற்றம்
கதையை படிக்க வாங்கிய கார்த்தி’ மெட்ராஸ் படத்தின் ஹீரோ ஆனது இப்படி தான்!