ரெட்ரோ ஷூட்டிங் ஸ்பாட்டில்... மகள் அனுப்பிய மெசேஜை படித்ததும் கலங்கி அழுத சூர்யா!
நடிகர் சூர்யா தனது மகள் குறித்து உருக்கமாக பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா பற்றி, எந்த ஒரு தகவல் வெளியானாலும் அது அதிக அளவில் கவனிக்கப்படும் ஒன்றாக மாறி விடுகிறது. தற்போது, கங்குவா படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு பின்னர் சூர்யா நடிப்பில் மே 1-ஆம் தேதி ரிலீஸ் ஆகி இருக்கும் திரைப்படம் தான் 'ரெட்ரோ'.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில்... சூர்யாவிற்கு ஜோடியாக , பூஜா ஹெக்டே நடிக்க.. ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம், சுவாஸிகா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ரெட்ரோ வசூல்:
இந்தப் படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டும், ரூ19.25 கோடி வசூல் குவித்தது. 2ஆவது நாளில் 7.75 கோடி வசூல் குவித்து மொத்தமாக இந்தியாவில் மட்டும் ரூ. 27 கோடி வசூல் குவித்திருக்கிறது. உலக அளவில் 3 நாட்களில் ரூ.50 கோடியை எட்டி விட்டதாக கூறப்படுகிறது.

சூர்யாவுக்கு பிடித்த பாடல்கள்:
தற்போது இந்த படம் வெளியாவதற்கு முன், பட புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சூர்யாவின் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சூர்யாவுடன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இடம் பெற்றுள்ளனர். இதில் சூர்யாவின் இசை ஆர்வம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா தனக்கு பழைய பாடல்கள் குறிப்பாக சோகமான பாடல்கள் ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி அந்த பாடல்களை நான் கேட்பேன். 'சித்தா' படத்தில் இடம் பெற்ற என் பார்வை உன்னோடு என்ற பாடல் மிகவும் பிடித்த பாடல் என கூறி இருந்தார்.
கலங்கி அழுத சூர்யா:
ஒருமுறை அந்த பாடலை தான் கேட்டுக் கொண்டிருப்பதாக தனது மகள் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினார். நான் அப்போது ரெட்ரோ சூட்டிங்கில் இருந்தேன். அந்த மெசேஜ் வரும் போது மணி ஒரு 3 இருக்கும். அதை பார்த்த பிறகு நான் அழுதுவிட்டேன். வாழ்க்கைக்கும், பாடல்களுக்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது என்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






















