Supporting actor Prabhu passed away: நடிகர் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்கள்.. துணை நடிகர் பிரபு புற்றுநோயால் காலமானார்!
தனுஷ் நடிப்பில் வெளியான 'படிக்காதவன்' படத்தில் நடித்த துணை நடிகர் பிரபு இன்று காலமானார்.
![Supporting actor Prabhu passed away: நடிகர் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்கள்.. துணை நடிகர் பிரபு புற்றுநோயால் காலமானார்! Supporting actor Prabhu who starred in Dhanush's 'padikadhavan', passed away today Supporting actor Prabhu passed away: நடிகர் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்கள்.. துணை நடிகர் பிரபு புற்றுநோயால் காலமானார்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/bebb2d64515168bd9d7441d4184147e71686759656350571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு படத்தில் தலையை காட்டிவிட்டால் பெரிய ஆளாகிவிடலாம் என்று இன்றைய இளைஞர்கள், இன்ஸ்டாவில் ரீல்ஸ் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், தமிழ் சினிமாவை நம்பி ஏமாந்தவர்கள் பட்டியல் தினமும் ஒன்று என்று நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த காலம் முதல் இந்த காலம் வரை தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர்கள் கூட, காணாமல் போயுள்ளனர்.
அந்த வகையில், தனுஷ் நடிப்பில் வெளியான 'படிக்காதவன்' படத்தில் நடித்த துணை நடிகர் பிரபு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு யாரும் உதவி செய்யாத நிலையில், தனியார் யூடியூப் செய்தி நிறுவனம் ஒன்று இவரை பேட்டி எடுத்தது. இதை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் இவரின் புற்றுநோய்க்கு தேவையாக மருத்துவ உதவிகளை செய்திருந்தார்.
இந்தநிலையில் துணை நடிகர் பிரவு இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர். ஆதரவற்ற நிலையில் இருந்தவருக்கு மருத்துவ உதவிகள் செய்த இசையமைப்பாளர் டி.இமான் தகனம் செய்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)