Rajinikanth: “நாங்க எல்லாம் பார்த்தா கார் வெடிக்காது; இவரால மட்டும்தான் முடியும்” - பிரபல நடிகரை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்
முன்னாள் ஆந்திரா முதலமைச்சர் என்.டி.ஆர் அவர்களின் நூறாவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் நடிகர் பாலகிருஷ்ணனின் நடிப்பை பாராட்டி பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்
முன்னாள் தெலுங்கு சூபர்ஸ்டார் மற்றும் அரசியல் தலைவரான என்.டி. ராமாராவின் நூறாவது ஆண்டு நினைவு தினக் நிகழ்ச்சியில் நடிகர் சூபர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றார்.இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
தெலுங்கு சூப்பர்ஸ்டாராக மற்றும் ஆந்திரா முதலமைச்சராக இருந்தவர் என்.டி.ராமாரவ். அவரது நூறாவது ஆண்டு நினைவு தினம் இன்று விஜயவாடாவில் கொண்டாடப் பட்டது. இந்த நிகழ்வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் நடமுரி பாலகிருஷ்ணன் ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் என்.டி ராமாராவ் தன் மேல் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசினார். தனது இளமைக்காலத்தில், தான் என்.டி.ஆரின் படங்களை பார்த்து வளர்ந்ததாக கூறி தனது பேச்சைத் தொடங்கினார். தான் சினிமாவில் நடிக்க சென்னை கிளம்பி வந்ததற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒருவர் என்.டி.ஆர் என அவர் கூறினார்.
ஸ்ரீ கிருஷ்ணா பாண்டவீயம் திரைப்படத்தில் என்.டி. ஆரின் நடிப்பை பார்த்து மிரண்டுபோனதாகவும் தெலுங்கு மொழி கற்றுகொள்ளும் அளவிற்கு தான் அந்த படத்தை திரும்பத் திரும்பப் பார்த்ததாகவும் மிகவும் உற்சாகமாக பேசினார். என்.டி.ஆரின் நடிப்பைப் பார்த்து தான் கண்டக்டராக இருந்த்போது நடித்த நாடகத்தில் என்.டி.ஆர் மாதிரியே நடித்த ரஜினியை பலரும் பாராட்டி சினிமாவில் நடிக்க சொன்னதாக தனது இளமைக் கால நினைவுகளை நினைவுகூர்ந்தார் ரஜினிகாந்த்.
இதற்கடுத்ததாக நடிகர் பாலகிருஷ்னாவை பற்றி பேசிய ரஜினி பார்வையாளர்களை அனைவரையும் உற்சாகப் படுத்தும்படி பேசினார். திரையில் பாலகிருஷ்னா செய்வதை அமிதாப் பச்சன், ஷாருக் கான் ஆகிய எந்த நடிகரும் சாதிக்க முடியாது என பேசினார். தனது ஒரே பார்வையில் கார்கள் வெடித்து ஆகாயத்தில் பறக்க வைக்க அவரால் முடியும். ஆனால இதையே நானோ அமிதப் பச்சனோ செய்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்களால் அது முடியாது. ஆனால் பாலகிருஷ்னாவால் அது முடியும். ஏனென்றால் பாலகிருணாவில் அவரது ரசிகர்கள் என்.டி.ஆரை பார்க்கிறார்கள். அதனால் தான் அவர் இதை செய்தால் மக்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.’ என பாலகிருஷ்ணாவின் நடிப்பை பாராட்டிப் பேசினார் ரஜினிகாந்த். அவர் மேலும் நிறைய படங்களில் நடிக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்து தனது பேச்சை முடித்துக் கொண்டார் நடிகர் ரஜினி.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெய்லர் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் தமன்னா, ஜாக்கி ஷ்ராஃப், சஞ்சய் டத்,மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். சென்ற ஆண்டு இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகியிருந்தது. விரைவில் இந்த படத்தின் டீசர் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.