சென்னை வந்தார் ரஜினிகாந்த்! இந்தியன் தாத்தாவை பார்க்க எப்போ செல்கிறார்?
அம்பானி இல்ல திருமணத்தில் பங்கேற்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் இந்தியன் 2 படம் பார்ப்பது குறித்து பேசியுள்ளார்.
இந்திய திரையுலகின் பிரபல நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பங்கேற்று இன்று சென்னை திரும்பினார். சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்தியன் 2 பார்க்கப்போகும் ரஜினி:
அப்போது, அவர் கூறியதாவது, அம்பானி வீட்டு கடைசி கல்யாணம். ரொம்ப பிரம்மாண்டமாக செய்திருந்தார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருந்தது. கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் இன்னும் பார்க்கவில்லை. நாளை பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர், அவரிடம் என்கவுன்டர் மட்டுமே சட்டம் ஒழுங்கிற்கு தீர்வாகுமா? என்று ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.
சூடுபிடிக்கும் கூலி படப்பிடிப்பு:
நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அம்பானி இல்ல திருமணத்தில் பங்கேற்று திரும்பிய அவர் விரைவில் கூலி படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகாசிங், மஞ்சுவாரியர், துஷாரா விஜயன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வேட்டையன் படம் படமாக்கப்பட்டது.
ஜெய்பீம் போன்று தரமான கதைக்களத்துடன் வேட்டையன் படமும் உருவாகியுள்ளதாக படக்குழு கருத்து தெரிவித்துள்ளது. கூலி படம் வழக்கமான லோகேஷ் கனகராஜ் படமாக ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது. கூலி படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி ஏற்கனவே ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக மாறியுள்ளது.
மேலும் படிக்க: Parthiban: சந்தோஷத்தில் சாகடிங்க.. சினிமாவ விட்டு விலக நினைச்சேன்.. டீன்ஸ் படம் பற்றி பார்த்திபன் உணர்ச்சிகரம்!
மேலும் படிக்க: Sivakarthikeyan: மாவீரன் படத்த ஒரு வருஷத்துக்குப் பிறகும் கொண்டாடறாங்க.. சிவகார்த்திகேயன் எமோஷனல் பதிவு!