5 Years of 2.0: தமிழ் சினிமாவின் பிரமாண்டம்.. வசூல் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி.. 2.0 வெளியான நாள் இன்று..!
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 2.0 படம் இன்றோடு 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 2.0 படம் இன்றோடு 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதிக வசூல் செய்த படம்
கடந்த 2010 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ், டேனி டென்சோங்பா உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘எந்திரன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஒரு ரோபோவுக்கு உணர்வுகளும், காதலும் வந்தால் அது எந்த மாதிரியான எல்லைக்கெல்லாம் செல்லும் என்பதை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் சிட்டி ரோபோவாக நடிப்பில் மிரட்டியிருந்தார் ரஜினி. அன்றைய காலக்கட்டத்தில் ரூ.200 கோடி செலவில் தமிழ் சினிமாவில் தயாரான முதல் படம் என்ற பெருமையை எந்திரன் பெற்றிருந்தது. அதேசமயம் படங்களை விநியோகம் செய்து வந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல்முறையாக சொந்தமாக எந்திரன் படத்தை தயாரித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கிட்டதட்ட 9 ஆண்டுகள் கழித்து எந்திரன் படத்தின் 2 ஆம் பாகம் “2.0” என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் 2.0 படம் தமிழ் சினிமாவில் அதிகம் வசூலை பெற்ற படம் என்ற சாதனையை இன்றளவும் கொண்டுள்ளது.
எதிர்பாக்க வைத்து ஏமாற்றிய படம்
8 ஆண்டுகளுக்குப் பின் 2 ஆம் பாகம் வெளியான நிலையில், ஆரம்பம் முதலே 2.0 மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. செல்போன் டவர்களால் அதிகம் அழியும் பறவை இனம், இதனால் ஆத்திரம் கொள்ளும் பறவையை நேசிக்கும் மனிதனுக்குள் இருக்கும் சூப்பர் பவரால் உலகத்தை அழிக்க நினைப்பது, இதனை தடுக்க போராடும் விஞ்ஞானி மற்றும் ரோபோக்கள் என வழக்கமான கான்செப்டுடன் இப்படம் வந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
In 2.O movie Akshay kumar is only hero ~ Rajinikanth !pic.twitter.com/RZ59dlRSGF
— ʲᵈᴀʟᴇxᴀɴᴅᴇʀᵗʷᵉᵉᵗˢ (@JDALEXtweets) November 28, 2023
அதற்கு காரணம் எந்திரன் முதல் பாகத்தில் நாம் ஹீரோ (ரோபோ ரஜினிகாந்த்) என நினைத்து கொண்டிருக்கும் கேரக்டரே, வில்லான மாறி மிரட்டியிருக்கும். அப்படியிருக்கும் நிலையில் இது சற்று இரண்டாம் பாகத்தில் சறுக்கியது.
களம் கண்ட குட்டி ரோபோ
2.0 படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் குழந்தைக்கு பிடித்த குட்டி ரோபோ ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது, ஹாலிவுட்டிற்கே டஃப் கொடுக்கும் க்ராஃபிக்ஸ், விஎஃப்.எக்ஸ், மிரட்டலான இசை என எல்லாம் இருந்தாலும் 2.0 சற்று சுமாராகவே இருந்தது. லைகா நிறுவனம் பிரமாண்டமாக படத்தை தயாரித்த நிலையில் கோலிவுட்டை கலக்கிய 2.0 படம் தமிழ் சினிமாவின் பெருமையான விஷயம் தான்..