Aranmanai 4 Box Office Collection: குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி.. அரண்மனை 4 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
2014, 2016, 2021ஆம் ஆண்டுகளில் அரண்மனை படத்தின் 3 பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே அரண்மனை 4 படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது.
சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை 4 (Aranmanai 4) படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முதல் நாள் வசூல் நிலவரம் பற்றி காணலாம்.
அரண்மனை 4
2014, 2016, 2021ஆம் ஆண்டுகள் அரண்மனை படத்தின் 3 பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே அரண்மனை 4 படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், லொள்ளுசபா சேசு, கோவை சரளா எனப் பலரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ள அரண்மனை 4 படம் வழக்கமான முந்தைய பாகங்களில் இருந்து வித்தியாசப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.
தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம்
அரண்மனை 4 படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. இந்தப் படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் படம் பார்த்தவர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இப்படத்தின் க்ளைமேக்ஸ் பாடலில் குஷ்பூ மற்றும் சிம்ரன் ஆடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
#Aranmanai4 pakka block buster 🔥
— Santosh (@santosh26san) May 3, 2024
Family entertainment 💥
Achachoo is such a vibe 💥@hiphoptamizha @khu pic.twitter.com/lhJWfpdkND
இதனிடையே அரண்மனை 4 படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பள்ளி,கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சரியான நேரத்தில் படம் களமிறக்கப்பட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும் நீண்ட நாட்களாக வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்த சுந்தர் சி அரண்மனை 4 படத்தின் மூலம் மீண்டு வந்துள்ளார் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
முதல் நாள் வசூல் எவ்வளவு?
இந்நிலையில் அரண்மனை 4ஆம் பாகத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் ரூ.3.60 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்று மற்றும் நாளை விடுமுறை தினங்களை ஒட்டி படத்தின் வசூல் எகிறும் என்பதால் “பிளாக்பஸ்டர் ஹிட்” ஆவது உறுதியாகியுள்ளது. காமெடி கலந்த ஹாரர் படங்களைப் பார்க்க அனைவரும் விரும்புவார்கள் என்பதை அரண்மனை 4 படம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.
மேலும் படிக்க: அரண்மனை 4! ரசிகர்களை பயமுறுத்தியதா? வெறுப்பேற்றியதா? முழு திரை விமர்சனம் இதோ!