Squid Game season 2: பயங்கரமான விளையாட்டாச்சே..! ஸ்க்விட் கேம் சீசன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு - சீசன் 3 அப்டேட்
Squid Game season 2: ஸ்க்விட் கேம் வெப் சீரிஸின் இரண்டாவது சீசனுக்கான வெளியீட்டு தேதி, புதிய டீசர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Squid Game season 2: ஸ்க்விட் கேம் வெப் சீரிஸின் மூன்றாவது சீசனுக்கான அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
ஸ்க்விட் கேம் சீசன் 2 வெளியீட்டு தேதி:
கொரோனா காலகட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டு, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்க்விட் கேம் எனும் கொரிய வெப் சீரிஸ் வெளியானது. எளிமையான போட்டிகளை கொண்டு உயிரை பறிக்கும் ஹாரர் தீமில் வெளியான இந்த சீரிஸ், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 1.65 பில்லியன் பார்வையாளர்களை பெற்று, ஒடிடி தளத்தில் அதிக பார்வயாளர்களை பெற்ற வெப் சீரிஸ்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இரண்டாவது பாகம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, வரும் டிசம்பர் மாதம் 26ம் தேதி ஸ்க்விட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக புதிய டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்க்விட் கேம் சீசன் 3 அப்டேட்:
இதனிடையே, ஸ்குவிட் கேம் வெப் சீரிஸின் நிர்வாகத் தயாரிப்பாளரும், எழுத்தாளரும், இயக்குநருமான ஹ்வாங் டோங்-ஹியூக் ரசிகர்களுக்கான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “சீசன் 1 உலகம் முழுவதும் நம்பமுடியாத வரவேற்பைப் பெற்று கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன மற்றும் கற்பனை செய்ய முடியாத பல நிகழ்வுகள் நடந்தன. சீசன் 2க்கான தேதியை அறிவிக்கவும், இறுதி சீசனான சீசன் 3 பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தக் கடிதத்தை எழுதுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சீசன் 2 படப்பிடிப்பைத் தொடங்கிய முதல் நாளில், "ஆஹா, நான் மீண்டும் ஸ்க்விட் கேம் உலகில் வந்துவிட்டேன் என்று என்னால் நம்ப முடியவில்லை" என்று நினைத்தது நினைவிருக்கிறது. மூன்று வருடங்களுக்குப் பிறகு ஸ்க்விட் கேமில் நீங்கள் திரும்புவது எப்படி இருக்கும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
Attention all players: we’re here to deliver an important message. pic.twitter.com/zTcnj05BGa
— Netflix India (@NetflixIndia) July 31, 2024
சீசன் 1 முடிவில் பழிவாங்குவதாக சபதம் செய்த சியோங் கி-ஹன் திரும்பி வந்து மீண்டும் கேமில் இணைகிறார். பழிவாங்குவதில் அவர் வெற்றி பெறுவாரா? ஃப்ரண்ட் மேன் இம்முறையும் எளிதான எதிரியாக இருக்கப்போவதில்லை. அவர்களின் இரு உலகங்களுக்கிடையேயான இறுதி மோதல், சீசன் 3 ஆக அடுத்த ஆண்டு உங்களிடம் கொண்டு வரப்படும். ஒரு புதிய ஸ்க்விட் விளையாட்டை உருவாக்குவதற்கு விதைக்கப்பட்ட விதை இந்த கதையின் முடிவில் வளர்ந்து பலனளிப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் உங்களுக்கு மற்றொரு த்ரில் சவாரி கொண்டு வருவதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். வரவிருக்கும் விஷயங்களில் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என இயக்குனர் தெரிவித்துள்ளார்.