மேலும் அறிய

Stan Lee on Spider Man: ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் உருவானது எப்படி? வைரலாகும் ஸ்டான்லீ பேச்சு!

ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் உருவானது எப்படி என்று ஸ்டான்லீ பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஹீரோக்கள் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் பிரபலமானது மார்வெல் ஸ்டூடியோஸ். மார்வெல் நிறுவனத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் கதாபாத்திரங்களில் ஒன்று ஸ்பைடர்மேன். இன்று ஸ்பைடர்மேன் வரிசைகளில் மிகவும் முக்கியமான திரைப்படமான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி மாபெரும் வரபேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தற்போது ஸ்பைடர்மேன் உள்ளிட்ட அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய ஸ்டான்லீ ஸ்பைடர்மேன் உருவானது பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ஸ்டான்லீ ஸ்பைடர்மேன் உருவான விதம் பற்றி கூறியிருப்பதாவது,

“ நாங்கள் ஏற்கனவே பெண்டாஸ்டிக் 4- ஐ முடித்திருந்தோம். நான் நினைக்கிறேன் அது எக்ஸ் மேன். எனக்கு அந்த வரிசை நினைவில்லை. என்னுடைய பதிப்பாளர் என்னிடம் வந்தார். அவர் என்னிடம், ‘ ஸ்டான் நீ இன்னொரு சூப்பர்ஹீரோவை உருவாக்க வேண்டும்’ என்றார். நானும் சரி என்றேன். நானும் வீட்டிற்கு சென்றேன். என் பதிப்பாளர் என்னிடம், ஏதாவது சிறப்பாக செய். அப்போதுதான் வேலையை தக்கவைக்க முடியும் என்றார்.

Stan Lee on Spider Man: ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் உருவானது எப்படி? வைரலாகும் ஸ்டான்லீ பேச்சு!

நானும் அப்போது என்னால் என்ன செய்ய முடியும்? என்ற சிந்தனையில் இருந்தேன். மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், சூப்பர்ஹீரோவிற்கு சூப்பர் பவர் இருக்க வேண்டும். ஒருமுறை அந்த கதாபாத்திரம் சூப்பர் பவரை பெற்றுவிட்டால், அனைத்தும் கிடைத்துவிடும்.

இதனால், புதிய ஹீரோவிற்கு நான் என்ன சக்தி கொடுக்கலாம் என்று யோசித்தேன். நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, சுவற்றில் ஈ ஊர்ந்து கொண்டிருந்ததை பார்த்தேன். அப்போது, ஒருவேளை நமது சூப்பர்ஹீரோக்கு சுவரில் ஒட்டிக்கொண்டு, அவற்றின் மீது ஊர்ந்து செல்லும் சக்தி கிடைத்தால் எப்படி இருக்கும் என்று நான் சொல்லிக்கொண்டேன். எனக்கு அது நல்லது என்றும் தோன்றியது. இப்போது, எனக்கு ஒரு பெயர் தேவைப்பட்டது.

பறக்கும் மனிதன் (ப்ளை மேன்), கொசு மனிதன்( மஸ்கிட்டோ மேன்) என்று யோசித்தேன். சிலந்தி மனிதன் (ஸ்பைடர்மேன்) என்று யோசித்தேன். அந்த பெயர் நாடகத்தனமாக இருந்தது. இருந்தாலும் சரி. என்னிடம் என் ஹீரோ உள்ளான். அவனுக்கான சக்தி என்னிடம் இருந்தது. அவனது பெயரும் என்னிடம் இருந்தது. அவனுக்கென்று சொந்த பிரச்சினைகளை உருவாக்க நினைத்தேன்.

Stan Lee on Spider Man: ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் உருவானது எப்படி? வைரலாகும் ஸ்டான்லீ பேச்சு!

ஏனென்றால், மக்கள் சரியாகதான் வாழ்கின்றனர். ஆனால், பெரும்பாலான மக்களுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளது. மேலும், அந்த சூப்பர்ஹீரோவை பதின்ம வயது( டீன் ஏஜ்) கதாபாத்திரமாக உருவாக்க விரும்பினேன். எனக்கு தெரிந்த வரை, அப்போது பதின்ம வயது சூப்பர்ஹீரோக்களே கிடையாது. எனது கைகளில் அற்புதமான ஐடியா இருந்தது.

நான் என்னுடைய பதிப்பாளர் அலுவலகத்திற்கு ஓடினேன். அவரிடம் எனது ஐடியாவை சொன்னேன். அவர் ‘ நான் இதுவரை கேட்டதிலே இதுதான் மிகவும் மோசமான ஐடியா ஆகும். முதலில் சிலந்தி என்றாலே மக்கள் வெறுப்பார்கள். அதனால், உன்னால் ஸ்பைடர்மேனை சூப்பர்ஹீரோ என்று கூற முடியாது. நீ அந்த கதாபாத்திரம் பதின்ம வயது சிறுவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? பதின்ம வயது சிறுவர்கள் பக்க வாத்தியங்களை போலதான் இருக்க முடியும். நீ அந்த கதாபாத்திர்த்திற்கு சொந்த சிக்கல்கள் இருக்க வேண்டும் என்று நீ நினைக்கிறாய். ஸ்டான். சூப்பர்ஹீரோ என்றால் என்னவென்று உனக்கு தெரியாதா? அவர்களுக்கு சொந்த பிரச்சினைகளே கிடையாது’ என்றார்.

நான் மிகுந்த அதிருப்தியுடன் அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறினேன். மிகவும் புத்திசாலியானவரிடம் இருந்து இப்படியொரு பதில் வந்ததால் மிகவும் அதிருப்தி அடைந்தேன். ஸ்பைடைர்மேன் ஐடியாவில் இருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. அதனால், இதை ஒரு இதழில் வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். அமேசிங் பேண்டஸி என்ற இதழில் வெளியிட்டோம். அது நன்றாக விற்பனையாகாத ஒரு இதழ். அந்த இதழின் கடைசி கட்டத்தில் இருந்தது. கடைசி கட்டத்தில் உள்ள ஒரு இதழில் என்ன வந்தாலும் யாரும் கவலைப்படப்போவதில்லை.

Stan Lee on Spider Man: ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் உருவானது எப்படி? வைரலாகும் ஸ்டான்லீ பேச்சு!

நான் ஸ்பைடர்மேனை அதில் வெளியிட்டேன். அதன் சிறப்பம்சங்களை பற்றி அவர்கள் மறந்துவிட்டார்கள். ஒரு மாதம் கழித்து அனைத்து விற்பனை விவரங்களும் வருகின்றன. எனது பதிப்பாளர் வேகமாக எனது அலுவலகத்திற்கு வந்தார். என்னிடம் ‘ ஸ்டான்… ஸ்டான்.. நாம் இருவருக்கும் பிடித்த அந்த கதாபாத்திரம் நினைவிருக்கிறதா? ஸ்பைடர்மேன். அதை ஒரு தொடராக உருவாக்கு’ என்றார்.

இதை ஸ்டான்லி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்கள் சந்திப்பின்போது பகிர்ந்தார். ஸ்டான்லீ தான் கேப்டன் அமெரிக்கா, அயர்ன்மேன், ஹல்க், தோர் உள்ளிட்ட சூப்பர்ஹீரோக்கள் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget