மேலும் அறிய

SPB Birth Anniversary:இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... பாடும் நிலா எஸ்.பி.பி பிறந்தநாள் இன்று

HBD SP Balasubrahmanyam: பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாள் இன்று. அவரை பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம்(SP Balasubrahmanyam) முதன் முதலில் 1966-ஆம் ஆண்டு சிறீ சிறீ சிறீ ராமண்ணா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். தமிழில் இவர் முதன்முதலில் ஓட்டல் ரம்பா என்ற திரைப்படத்திற்கான பாடி இருந்தார். ஆனால் அந்த திரைப்படம் வெளியாகவில்லை. எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் திரைப்படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் தான் முதலாவதாக வெளியானது. இவர் தெலுங்கு, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில்  40 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார். இதன் மூலம் இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். 

6 முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி. இதுவரை தேசிய விருதினை 4 மொழிகளுக்கு பெற்ற ஒரே திரைப்பட பாடகர் எஸ்.பி.பி. தான். மேலும் இவர் ஏராளமான மாநில அளவிலான விருதுகள் உள்ளிட்டவற்றை வென்று குவித்துள்ளார். மேலும் 16 இந்திய மொழிகளில் இவர் பாடல்களை பாடியுள்ளார் எஸ்.பி.பி 

எஸ்.பி.பியின் வெற்றிக்கு காரணம், இசையின் மீது அவர் கொண்ட காதல் தான். அனைத்து பாடகர்களுமே சிறந்த பாடர்கர்கள் தான் என்றாலும் இவர் தனித்து நிற்க ஒவ்வொரு பாடலுக்கும் இவர் மெனக்கிடுவது தான். 

தமிழில் பல்வேறு இசையமைப்பாளர்களின் முதன்மையான சாய்சாக இருந்தவர் எஸ்.பி.பி தான். அதற்கு காரணம் திரைப்படத்தில் அந்த பாடலை கதாபாத்திரம் எந்த சூழலில் இருந்து பாட வேண்டும் அதற்கான மாயஜாலத்தை, தனித்துவத்தை தன் ஒவ்வொரு பாடலிலும் எஸ்.பி.பி வெளிப்படுத்தி இருப்பார். 

உற்சாகம், சோகம், காதல் என அனைத்தையும் தன் குரலிலேயே வெளிப்படுத்தும் வித்தகர். அதனால் தான் இவர் ஏராளமான இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்களின் விருப்பமான பாடகராக இருந்தார். இவர்  குரலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. 

ரஜினி நடிப்பில் வெளியான வீரா என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கூட தென்றல் மலர்கள் ஆட என்ற பாடல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் குரலில் வெளியான கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என்ற பாடல் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல். அதற்கு இசை மட்டும் அல்ல எஸ்.பி.பியின் வசிய குரலும் தான் காரணம் . 

அமர்க்களம் படத்தில் இடம் பெற்ற சத்தமில்லாத தனிமை கேட்டேன் பாடலை எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடி சாதனை படைத்தார். ஒரு குழந்தையின் தனிமையையும் ஏக்கத்தையும், ஆசையையும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தக்கூடிய பாடல் இது. இந்த பாடலை மிக அருமையாக பாடி இருப்பார் பாடும் நிலா. 

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எஸ்.பி.பி பாடி இருப்பார். தன் காதலை ஏற்பாயா என சோகம் கலந்த ஏக்கத்தோடு கதாநாயகன் இந்த பாடலை பாடுவதாய் காட்சி. எஸ்.பி. தன் குரலில் காதலையும் ஏக்கத்தையும் சோகத்தையும் இசைக்கு ஏற்றார் போல் மிக அழகாக தன் குரலில் வெளிப்படுத்தி இருப்பார். 

தன் குரலிலே மாயாஜாலம் செய்து பாடலை கேட்பவர்களை தன் வசப்படுத்தும் வித்தகர் பாடுநிலா எஸ்.பி.பியின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறது ஏபிபி நாடு.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கைதி இந்தி ரீமேக்கில் முறைகேடு...ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு
கைதி இந்தி ரீமேக்கில் முறைகேடு...ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு
சமுத்திரகனி நடித்துள்ள கார்மேனி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
சமுத்திரகனி நடித்துள்ள கார்மேனி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Ajithkumar: அஜித்தின் குளிர்பான விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகரின் மகன் - யார் தெரியுமா?
Ajithkumar: அஜித்தின் குளிர்பான விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகரின் மகன் - யார் தெரியுமா?
கெளதம் ராம் கார்த்திக் நடிக்கும் ' பிளடி பாலிட்டிக்ஸ்' விறுவிறுப்பாக படப்பிடிப்பில்
கெளதம் ராம் கார்த்திக் நடிக்கும் ' பிளடி பாலிட்டிக்ஸ்' விறுவிறுப்பாக படப்பிடிப்பில்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Candidate List : அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! 127 தொகுதிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு- யார் எந்த தொகுதி.?
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! 127 தொகுதிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு- யார் எந்த தொகுதி.?
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Tamil Manila Congress Candidates: தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எந்த கார் உங்களுக்கு பெஸ்ட்? தேர்வு செய்வது எப்படி?
SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எந்த கார் உங்களுக்கு பெஸ்ட்? தேர்வு செய்வது எப்படி?
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
Embed widget