மேலும் அறிய

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழகத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள்முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் கடந்த 3 நாள்களில் மட்டும் 42 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள், ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை மார்ச் 15-ம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்று மாலை முதலே 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

அதன்படி, வேட்பாளர்கள் 40 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே செலவு செய்ய அனுமதி, வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள், பணம், மதுபானம் போன்றவை வழங்கினால் நடவடிக்கை, உரிய ஆவணங்களின்றி 50,000 ரூபாய்க்கு ரொக்கமாகப் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் என பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு போன்றவை தீவிர பணியில் இறங்கியிருக்கின்றன.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மூன்றே நாளில் சுமார் 42 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள், ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "2.37 கோடி ரூபாய் ரொக்கம்,
2.88 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள்,
16.42 கோடி ரூபாய் மதிப்பிலான விலைமதிப்பற்ற உலோகங்கள்,
20.80 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருள்கள் மற்றும் 18 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் என மொத்தமாக 42.65 கோடி ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்ட விரோத பணப் புழக்கம், வாக்காளர்களைக் கவர வழங்படும் இலவச பொருள்கள், மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருள்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை வீடியோக்கள்

திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: நவம்பர் 4 முதல் தமிழகத்தில் சேவை முடங்கும் அபாயம்!
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: நவம்பர் 4 முதல் தமிழகத்தில் சேவை முடங்கும் அபாயம்!
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Embed widget