மேலும் அறிய

Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?

Petrol Diesel Price Hike: கலால் வரியை குறைத்தன் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்றுவதற்கான அறிகுறியை, மத்திய அரசு வழங்கியுள்ளதாக துறை சார் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Petrol Diesel Price: கலால் வரி 10 ருபாய் அளவிற்கு குறைத்தும், பொதுமக்களுக்கான விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது ஏமாற்றமாக அமைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..

வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கான, எண்ணெய் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என பல தகவல்கள் பரவினாலும், போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தான், பெட்ரோல் மீது 13 ரூபாயாக இருந்த கலால் வரியை 3 ரூபாயாக குறைத்துள்ளதோடு, டீசல் மீதான 10 ரூபாய் எனும் கலால் வரியை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, உள்ளூர் சந்தைகள் அழுத்தத்தில் இருக்கும் சூழலில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பொதுமக்களுக்கான பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடரும்.

வரி வருவாயை விட்டுக்கொடுத்த மத்திய அரசு..

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீதான தாக்குதலை தொடங்கியது முதல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவிற்கான ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை தற்போது சுமார் 149 அமெரிக்க டாலர் அளவில் உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக தனியார் நிறுவனமான நயாரா, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாயையும் ஒரு லிட்டர் டீசலுக்கு 3 ரூபாயையும் உயர்த்தியது. இதனால், எரிபொருட்களின் விலையை உயர்த்துவதற்கான சூழல் உருவாகிவிட்டது என்ற அச்சம் பொதுமக்களிடையே பரவ தொடங்கியது. இந்நிலையில் தான் பொதுத்துறை நிறுவனங்கள் மீதான அழுத்தத்தை குறைக்க, தங்களுக்கான வரி வருவாயை மத்திய அரசு விட்டுக்கொடுத்துள்ளது. அதாவது, பொதுமக்களுக்கான விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும் வரியை குறைத்து, எரிபொருட்களின் விலை உயர்வதை மத்திய அரசு தடுத்துள்ளது.

விலை உயர்வு கன்ஃபார்மா?

கடந்த சில வாரங்களாகவே கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வந்தாலும், சில்லறை விற்பனையில் விலையை உயர்த்தாமல், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கடும் அழுத்தத்தில் இருந்தன. அதற்கான தற்காலிக சலுகையாகவே இந்த வரி குறைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் விலை குறைக்கப்படவில்லை, மாறாக அதிகமாகாமல் மட்டுமே தடுப்பட்டுள்ளது.  நீண்ட நாட்களுக்கு இந்த வரி வருவாயை விட்டுக் கொடுத்தால் மத்திய அரசுக்கு மிகப்பெரிய வருவாய் பற்றாக்குறை ஏற்படக்கூடும். எனவே, விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்பதையே இந்த கலால் வரி ரத்து உறுதி செய்துள்ளது.

தேர்தல் முடிந்ததும் விலையேற்றம்?

தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா மற்றும் அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். இது வாக்காளர்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதனை தவிர்க்கவே, வரி வருவாயை விட்டுக்கொடுத்து, சில்லறை விலை அதிகரிப்பை மத்திய அரசு தடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை 5 மாநில தேர்தல் முடியும் வரையில், வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபடியே இருந்தால், நிச்சயமாக தேர்தல் முடிவுகளுடன், சில்லறை விற்பனையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கவும் அதிகளவில் வாய்ப்புள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget