மேலும் அறிய

SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எந்த கார் உங்களுக்கு பெஸ்ட்? தேர்வு செய்வது எப்படி?

SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் கார் மாடல்களில் எது உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் கார் மாடல்களில் உங்களுக்கான சரியான மாடலை தேர்வு செய்வது எப்படி? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான்

கார் வாங்க வேண்டுமென முடிவு செய்தாலே  எஸ்யுவி, ஹேட்ச்பேக் மற்றும் செடான் ஆகிய பெயர்களை தான் நீங்கள் அதிகம் கேள்விப்படுவீர்கள். ஆனால், முதல்முறையாக கார் வாங்குபவராக இருந்தால், அவற்றில் உங்களுக்கானது எது? என்பதை எப்படி அறிவீர்கள்? இது நீங்கள் எப்படி காரை ஓட்டுவீர்கள்? எந்த பகுதியில் காரை பயன்படுத்த உள்ளீர்கள்? தினசரி பயன்பாட்டில் உங்கள் காரிடமிருந்து நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? என்பதன் அடிப்படையிலேயே உங்களுக்கான காரை தேர்வு செய்ய முடியும். 

ஹேட்ச்பேக் கார் மாடலில் என்ன எதிர்பார்க்கலாம்?

உங்களது தினசரி பயணமானது கூட்ட நெரிசல் மிக்க பயணத்தை கொண்டிருந்தாலோ, பார்கிங் வசதி குறைவாக இருந்தலோ, எரிபொருளுக்கான செலவு பட்ஜெட்டில் இருக்க வேண்டும் என கருதினாலோ ஹேட்ச்பேக் கார் மாடல் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும். மாருதி சுசூகி ஸ்விஃப்ட், டாடா டியாகோ மற்றும் ஹுண்டாயின் ஐ20 ஆகிய கார் மாடல்கள் மேற்குறிப்பிடப்பட்ட தேவைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 2 பாக்ஸ் டிசைன் பின்பற்றப்படுகிறது. அதன் மூலம் பூட் வசதி கேபினின் ஒரு அங்கமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார்கள் சிறியதாகவும், எளிதானதாகவும், ஓட்டுவதற்கு எளிதானதாகவும் உள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசலில் கூட உங்களால் எளிமையாக வளைந்து நெளிந்து செல்ல முடியும்.


SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எந்த கார் உங்களுக்கு பெஸ்ட்? தேர்வு செய்வது எப்படி?

லிட்டருக்கு சுமார் 18 முதல் 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதால், எரிபொருள் செலவை குறைப்பதிலும் நல்ல தேர்வாக உள்ளன. பராமரிப்பு மற்றும் காப்பீடு செலவுகள் குறைவாக உள்ளதால், முதல்முறையாக கார் வாங்க விரும்புபவர்கள் ஹேட்ச்பேக்கை விரும்புகின்றனர். ஆனால், இடவசதி பற்றாக்குறை என்பது இதில் ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும். 

செடான் கார் மாடலில் என்ன எதிர்பார்க்கலாம்?

செடான் கார் மாடலை பார்த்தாலே உடனடியாக உங்களுக்கு வித்தியாசம் தெரியும். ஹோண்டா சிட்டி, ஹுண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வாகன் விர்டஸ் ஆகியவை வசதி மற்றும் நேர்த்திக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இன்ஜின், கேபின் மற்றும் தனிப்பட்ட இடவசதி என மூன்று பாக்ஸ் கட்டமைப்பை கொண்டுள்ளது. இது அதிவேகத்தில் நல்ல நிலைத்தன்மை மற்றும் உடைமைகள் தனிமைப்படுத்தப்படுவதால் இதமான கேபின் ஆகிய இரண்டு வழிகளில் உதவுகிறது.


SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எந்த கார் உங்களுக்கு பெஸ்ட்? தேர்வு செய்வது எப்படி?

நெடுஞ்சாலைகளில் பயன்படுத்துவதற்கு நம்பகமான மாடலாக உள்ளது. பயணம் மிருதுவானதகாவும், நீண்ட தூர பயணம் களைப்பற்றதாகவும் இருக்கும். ஹேட்ச்பேக்கை காட்டிலும் அதிக இடவசதியை கொண்டிருக்கும். அதேநேரம், குறைவான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் இதில் ஒரு பிரச்னையாக பார்க்கப்படுகிறது. இதனால், மோசமான சாலைகளில் நீங்கள் அதிவேகமாக பயணிக்க முடியாது. கடினமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகர்ப்புறங்களில் செடானின் பார்கிங்கும் சிரமமானதாக இருக்கும். 

எஸ்யுவி கார் மாடலில் என்ன எதிர்பார்க்கலாம்?

எஸ்யுவி கார் மாடலானது குறுகிய காலகட்டத்திலேயே வாடிக்கையாளர்களின் பிரதான தேர்வாக மாற சில நல்ல காரணங்கள் உள்ளன. ஹுண்டாய் க்ரேட்டா, டாடா நெக்ஸான், மஹிந்த்ரா XUV 700 ஆகிய மாடல்கள் இடவசதி, கரடுமுரடான தன்மை மற்றும் வலுவான தோற்றத்தின் கலவையாக உள்ளன. மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கும் அம்சமாக அதிகப்படியான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் உள்ளது. இதனால், குண்டும் குழியுமான மற்றும் சிதிலமடைந்த சாலைகள், தேங்கிய நீர் ஆகியவை பெரிய பிரச்னையாக இருக்காது. உயரமான இருக்கைகளை கொண்டிருப்பதால், கடும் போக்குவரத்து நெரிசலில் கூட தெளிவாக சாலை சூழலை பார்க்க முடியும். 



SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எந்த கார் உங்களுக்கு பெஸ்ட்? தேர்வு செய்வது எப்படி?

எஸ்யுவியில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பலதரப்பட்ட அம்சங்கள் உள்ளன.  குறிப்பாக அதிகப்படியான இடவசதி, 5 முதல் 7 வரையிலான இருக்கை ஆப்ஷன்கள், உடைகளுக்கு என நல்ல இடவசதி கொண்டு நீண்ட தூர பயணங்களுக்கான நல்ல தேர்வாக உள்ளன. அதேநேரம் எஸ்யுவிக்கள் விலை உயர்ந்தவை மற்றும் பரமாரிப்பு செலவு அதிகம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். பெரும்பாலும் 10 முதல் 18 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.

எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எது யாருக்கு?

  • நீங்கள் அதிகம் பயன்படுத்துவது நகரச் சாலைகளாக இருந்து, அதிகபட்ச சேமிப்பை விரும்பினால், ஹேட்ச்பேக் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும்
  • வசதி, நிலைத்தன்மை மற்றும் களைப்பற்ற நீண்ட தூரப் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் செடானை தேர்ந்தெடுக்கலாம்
  • இடவசதி, சாலையில் ஒரு கம்பீரமான தோற்றம் மற்றும் கரடுமுரடான நிலைகளைச் சமாளிக்கும் திறன் தேவைப்பட்டால், எஸ்யுவி முதன்மையான ஆப்ஷனாகும்

ஒட்டுமொத்தத்தில் சிறந்த கார் என எதுவும் இல்லை உண்ம. உங்கள் வாழ்க்கை முறைக்கு எது பொருந்துகிறதோ, அதை மட்டுமே சிறந்தது என கருத வேண்டும். தினசரி பழக்கவழக்கங்கள், குடும்பத்தின் அளவு மற்றும்  பயணிக்கும் சாலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு காரை தேர்வு செய்யுங்கள். அப்படி செய்தால் உங்கள் முதல் கார் என்பது வெறுமனே வாங்கும் ஒரு பொருளாக மட்டும் இருக்காது, மிகப்பெரிய சொத்தாக உருவெடுக்கும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget